
நயன்தாரா நடித்த படங்கள் வசூல் ரீதியாக நல்ல மார்க்கெட் இருப்பதால் அவரையே தங்கள் படங்களில் அவரை நடிக்கவைக்க தயாரிப்பாளர்கள் அணுகுகின்றனர். பாலிவுட்டில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர்,எழுத்தாளர் என பல அவதாரங்களில் தனது திறமையை வெளிக்காட்டி வரும் திறமைசாலி அனுராக் காஷ்யப், தற்போது இவர் நயன்தாரா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர். இந்த நிலையில் அவருக்கு விரைவில் முன்றாவது திருமணம் நடைபெறவுள்ளதாக கிசுகிசு கிளம்பியுள்ளது.
44 வயதான அனுராக் காஷ்யப் ஏற்கனவே கடந்த 2003ஆம் ஆண்டு ஆர்த்தி பஜாஜ் என்பவரை திருமணம் செய்து 7 ஆண்டுகளுக்கு பின்னர் அவரை விவாகரத்து செய்தார். இந்த தம்பதிக்கு 16 வயது ஆலியா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் தற்போது 22 வயது சுபத்ரா ஷெட்டி என்பவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் பாலிவுட்டில் வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்தி குறித்து இருவருமே எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.