சிம்புவுக்கு எப்போது திருமணம்..? அவர் கல்யாணத்துக்கு பிறகு எனக்கு!! பிரபல இளம் நடிகர் ஓபன் டாக்!!

Published : Sep 09, 2021, 07:36 PM IST
சிம்புவுக்கு எப்போது திருமணம்..? அவர் கல்யாணத்துக்கு பிறகு எனக்கு!!  பிரபல இளம் நடிகர் ஓபன் டாக்!!

சுருக்கம்

சிம்புவின் திருமணம் எப்போது என, கடந்த 10 வருடங்களுக்கு மேலாகவே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தாலும், இன்னும் சிம்புவுக்கு திருமணம் நடக்கவில்லை. இந்நிலையில் பிரபல இளம் நடிகர் ஜெய், சிம்புவின் திருமணம் முடிந்த கையேடு என் திருமணம் நடைபெறும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  

சிம்புவின் திருமணம் எப்போது என, கடந்த 10 வருடங்களுக்கு மேலாகவே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தாலும், இன்னும் சிம்புவுக்கு திருமணம் நடக்கவில்லை. இந்நிலையில் பிரபல இளம் நடிகர் ஜெய், சிம்புவின் திருமணம் முடிந்த கையேடு என் திருமணம் நடைபெறும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சிம்புவின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் ஒருவராக இருப்பவர் ஜெய். சிம்புவை போலவே சினிமாவில் காதல் சர்ச்சை, முதல் திரைப்படங்களுக்கு ஒழுங்காக ஒத்துழைப்பு தருவதில்லை என பல பிரச்சனைகளில் சிக்கி அதில் இருந்து மீண்டவர். ஆனால் தற்போது நல்ல பிள்ளையாக, பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவசிவா, குற்றமே குற்றம் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகர் விஜய்க்கு தம்பியாக குணச்சித்திர வேடத்தில் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், இதை தொடர்ந்து சசிகுமார் இயக்கத்தில் இவர் நடித்த, 'சுப்ரமணியபுரம்' இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. கதையை ஒழுங்காக தேர்வு செய்து நடிக்காததால் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. இனினும் தற்போது அழுத்தமான கதைகளை தேர்வு செய்வதன் மூலம் மீண்டும் பல படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று சென்னை திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் விழா ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களிடம் பேசிய ஜெய், செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மிகவும் கலகலப்பாக பதிலளித்தார். குறிப்பாக 'சிம்புவுக்கு திருமணம் ஆன பிறகு என்னுடைய திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்றும், அனேகமாக சிம்புவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என தெரிவித்துள்ளார்.

 

மேலும் தளபதி விஜய்க்கு தம்பியாக 'பகவதி' படத்தில் நடித்தேன், இதை தொடர்ந்து மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கேட்டு வருகிறேன், ஆனால் அவரோ... 'நீ தான் ஹீரோ ஆகிட்டியே' என தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுக்க மறுப்பதாக சிறிது கொண்டு ஜாலியாக பதிலத்திலுள்ளார். பொதுவாக பல வருடங்களாக தன்னுடைய படங்களில் புரொமோஷன்களில் கூட கலந்து கொள்வதை தவிர்த்து வந்த ஜெய், இப்படி கலகலப்பாக செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியாக பேசியது, பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!