ஒருவழியா 'டாக்டர்' படத்திற்கு பிறந்த விடிவு காலம்..!! ரிலீஸ் குறித்து வெளியாக அதிகார பூர்வ தகவல்..!!

Published : Sep 09, 2021, 05:44 PM IST
ஒருவழியா 'டாக்டர்' படத்திற்கு பிறந்த விடிவு காலம்..!! ரிலீஸ் குறித்து வெளியாக அதிகார பூர்வ தகவல்..!!

சுருக்கம்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகுமா? அல்லது, திரையரங்கில் வெளியாகுமா? என தெரியாமல் இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகுமா? அல்லது, திரையரங்கில் வெளியாகுமா? என தெரியாமல் இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது. 

ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் வெளியாகி யூ-டியூப்பில் 125 மில்லியன் வியூஸ்களை கடந்தது. அதேபோல்  so  baby  பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 'டாக்டர்' ஏற்கனவே மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 'டாக்டர்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் வர இருப்பதால் பட வெளியீட்டை தள்ளிவைக்கிறோம். என்றும் பட வியாபாரம், தேர்தல், ரசிகர்களை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறிய படக்குழுவினர். பின்னர் மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தெரிவித்தனர்.

ஆனால் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததால், தற்போது படம் வெளியாவது சாத்தியம் இல்லாமலேயே இருந்து வருகிறது. பின்னர் திரையரங்கில் வெளியிடும் முயற்சியை படக்குழு கைவிட்டு விட்டு, ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்வதற்கான முயற்சியை எடுத்து. இதுகுறித்த விளம்பரங்களும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், ஓடிடியில் ரிலீஸ் செய்வதில் பிரச்சனை நீடித்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா பிரச்சனை கட்டுக்குள் வரவே, திரைப்படங்கள் ஒவ்வொன்றாக திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில், 'டாக்டர்' படத்தையும் திரையரங்கில் ரிலீஸ் செய்யும் முடிவில் உள்ளது படக்குழு. இதுகுறித்து சமீபத்தில் வெளியான தகவலில், சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' படத்தை 'அக்டோபர்' மாதம் வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன தேதியில் வெளியாக உள்ளது என்பதை அறிவிக்கவில்லை.


 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

முன்னாள் காதலியை பார்த்து பேசிய சரவணன்: தடம் மாறியதா வாழ்க்கை? சீரியலில் அரங்கேறிய சென்டிமென்ட் ட்விஸ்ட்!
சவால் விட்ட பாலசந்தர்.! மேடையில் வைத்து கண்ணதாசன் செய்த சம்பவம்.! சூப்பர் ஹிட் பாடல் உருவான கதை.!