
சமீபத்தில் 'அடங்காமை' படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னையில் நடந்தது. பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட, 'அடங்காமை' படக்குழுவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், ஏ ஆர் முருகதாஸ் 'தர்பார்' படத்தின் போது, தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை என, ஆதங்கத்தோடு மேடையில் வெளுத்து வாங்கியுள்ளார்.
குறித்து அவர் பேசியதாவது. 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்த போது, எனக்கு மிகவும் கோவம் வந்தது. காரணம் ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற ஒருவர் இப்படி செய்தது தான். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் மும்பையில் தான் எடுக்கப்பட்டது. எனவே அங்கிருக்கும், நடிகர், நடிகைகள் தான் பயன்படுத்தப்பட்டனரே, தவிர தமிழ் கலைஞர்கள், துணை நடிகர்கள் யாரும் பயன்படுத்தப்படவில்லை.
ஒருவேளை அந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் நடந்திருந்தால்... பல்லாயிரம் பெப்சி தொழிலாளர்கள் மற்றும் எண்ணற்ற துணை நடிகர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். முதலில் நம் தமிழனை வாழ வைக்க வேண்டும், நமக்கு மிகுதியாய் இருக்கும் போது, மற்ற மாநிலத்தவர், மற்றும் இந்தியாவை வளர செய்வது தான் சிறந்தது என பேசினார்.
அதே போல் திரைப்படங்களுக்கு, தமிழில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் பெயர் வைபவள் அடி முட்டாள் என்றும், தமிழில் தலைப்பில்லாமலா? ஆங்கிலத்திற்கு செல்கிறீர்கள் என... ஆங்கில பெயர்களையே தொடர்ந்து தங்களுடைய படங்களுக்கு வைத்து வரும் சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை சாடி பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன். தான் கலந்து கொண்டுள்ள 'அடங்காமை' படத்தின் தலைப்பை திருக்குறளில் இருந்து எடுத்துதுள்ள இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் திருக்குறள், கம்ப ராமாயணம், என இளகிய நூல்களை எடுத்தால் மற்றவர்களுக்கே அருமையான தமிழ் தலைப்புகளை நாம் தரமுடியும், அதனால் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.