கேரள நடிகையை பலாத்காரம் செய்ய என்ன காரணம்?....தப்பிக்க முடியுமா திலீப்?

First Published Nov 23, 2017, 6:58 PM IST
Highlights
What is the reason for the rape of Kerala actress


கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 1,662 பக்க இறுதி குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு பிரிவினர் அங்கமாலி நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிகையில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பல்சர் சுனியுடன், 8-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள நடிகர் திலீப்புக்கும் இடையே நடிகையை கடத்துவதற்கான சதித்திட்டம் தீட்டியது, பலாத்காரம் செய்ய கூறியது ஆகியவற்றில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதில் முதல் சாட்சியாக கடத்தப்பட்ட நடிகையும், திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியார் 11வது சாட்சியாகவும், திலிப்பின் 2-வதுமனைவி காவ்யா மாதவன் 34-வது சாட்சியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மலையாள திரைப்பட நடிகர், நடிகைகள் 50-க்கும் மேற்பட்டோர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடத்தல்

கடந்த பிப்ரவரி மாதம் 17ந்தேதி, மலையாள நடிகை படப்படிப்பு முடிந்து கொச்சிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த போது மர்மநபர்களால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேரை பிப்ரவரி 23ந்தேதி கைது செய்தனர்.

கைது

 பல்சர் சுனி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் ஜூலை 10ந்தேதி கைது செய்யப்பட்டு 85 நாட்கள் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் கோரி 4 முறை தாக்கல் செய்த ஜாமீன்மனு நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கும் மெமரி கார்டு, கேமிரா ஆகியவை கிடைக்காததால் ஜாமீன்வழங்க போலீசார் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஜாமீன்

5-வது முறையாக ஜாமீன் தாக்கல் செய்தபோது, பல நிபந்தனைகளுடன் திலீப்புக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

 இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிறப்பு புலனாய்பு பிரிவினர் ஏற்கனவே முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டனர். அதில் பல்சர் சுனி உள்ளிட்ட 7 பேர் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு இருந்தனர். 2-வது கட்ட குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தனர்.

1,662 பக்கங்கள்

இந்நிலையில், ஒட்டுமொத்தமாக 1,662 பக்கங்கள் கொண்ட முழுமையான குற்றப்பத்திரிகையை அங்கமாலி முதன்மை ஜூடிசியல் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவினர் இன்று தாக்கல் செய்தனர். இதில் 355 சாட்சியங்கள், 2 அப்ரூவர் சாட்சியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

என்ன காரணம்

இந்த குற்றப்பத்திரிகையில், நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட முக்கியமான காரணத்தை போலீசர் குறிப்பிட்டுள்ளனர்.

 நடிகர் திலிப்புக்கும், நடிகை காவ்யா மாதவனுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை நடிகை , தனது தோழியும், திலிப்பின் முதல் மனைவி மஞ்சுவாரியாரிடம் அளித்துள்ளார்.

இதனால், நடிகர் திலிப்புக்கும், மஞ்சுவாரியாருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் குடும்பத்தில் பெரிய பிளவு ஏற்பட்டு, விவாகரத்துப் பெற்றனர். குழந்தைகளையும், திலீப் பிரிய நேர்ந்தது. இதற்கு பழி வாங்கும் நோக்கில் நடிகை  திருமணத்துக்கு முன் கூட்டு பலாத்காரம் மூலம் அவதூறு உண்டாக்க நடிகர் திலீப் திட்டம் தீட்டியுள்ளார்.

இந்த திட்டத்தை நிறைவேற்ற பல்சர் சுனியுடன், நடிகர் திலீப் கூட்டு சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார். நடிகை  மீது பல ஆண்டுகள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த செயலை திலீப் செய்துள்ளார்.

மேலும், நடிகை குறித்து சக நடிகர், நடிகைகளிடமும் நடிகர் தீலிப் பல முறை வெறுப்புணர்ச்சியுடன் பேசியுள்ளார், இதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. நடிகை  மீதான அடிப்படை காழ்ப்புணர்ச்சியே அவரை பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தும் அளவுக்கு திலீப்பை தூண்டியது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலங்கள்

மேலும், நடிகை  அவரின் உறவினர்கள் பலரும், திரைஉலகத்தினர் சிலரும் திலீப்புக்கு எதிராக வலுவான வாக்குமூலங்கள் அளித்துள்ளனர். அவை அனைத்துமே நடிகர் திலீப்பின் சதத்திட்டத்துக்கு வலுவூட்டவதாக அமைந்துள்ளன. மேலும், நடிகையை பாலியல் ரீதியாக பழிவாங்கி அவரின் திரையுலக மரியாதையை, நாசமாக்கவும் திலீப் திட்டமிட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

காக்கநாட்டில் நடிகை காவ்யா மாதவன் நடத்தி வரும் லக்ஸயா ஜவுளிக்கடைக்கு பல்சர் சுனியும், 2-வது குற்றவாளி விகீஸ் ஆகிய இருவரும் வந்துள்ளனர் என்பதை அந்த கடையின் முன்னாள் ஊழியர் சாகர் வின்சென்ட் தெரிவித்துள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

குற்றவாளிகள்

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பல்சர் சுனி உள்ளார். அதைத் தொடர்ந்து மார்டின், மணிகண்டன், சலீம், பிரதீப் சார்லி தாமஸ், வழக்கறிஞர் ராஜு ஜோசப், பிரதீஸ் சாக்கோ, சுனியுடன் சிறையில் இருந்த கைதிகள் விஷ்னு, மஸ்திரி சுனில் ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். விபின் லால், போலீஸ் கான்ஸ்டபிள் பி.கே. அனீஸ் ஆகியோர் அப்ரூவர்களாக மாறினர்.

வழக்குப்பதிவு

நடிகர் திலிப்புக்கு எதிராக ஐ.பி.சி பிரிவு 120 குற்றச்சதி, பிரிவு 109 ஆள் கடத்தலுக்கு உடந்தை, பிரிவு 366 ஆள் கடத்தல், பிரிவு 354, 354(பி)பெண்ணுக்கு எதிராக கிரிமினல் தாக்குதல், பிரிவு 375(டி) கூட்டு பலாத்காரம், பிரிவு 201 ஆதாரங்களை அழித்தல், பிரிவு 21 , பிரிவு34, தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவை தொடரப்பட்டுள்ளது.

click me!