பேபிம்மா தீபாவுக்கும், கெளதம் வாசுதேவ் மேனனுக்கும் இன்னாய்யா பிரச்னை?: வெப்சீரிஸுக்கு வேட்டு வைக்கும் தீபா

By Vishnu PriyaFirst Published Sep 11, 2019, 5:31 PM IST
Highlights

சினிமாவில் டெரர் வில்லன் கதாபாத்திரங்களை வடிவமைத்து தெறிக்கவிட்டவர் கவுதம், ஆனால் ரியலில் இந்த மருமகள் அவரை மண்டை காய வைக்கிறாராம்

இந்தியாவின் செம்ம ஸ்டைலியான சினிமா இயக்குநர்களில் மிக முக்கியமானவர் என பெயர் பெற்றவர் கவுதம் வாசுதேவ் மேனன். மின்னலேவில் துவங்கி இவரது படங்களெல்லாம் தாறுமாறான சூப்பர் ஹிட் படங்கள். அதிலும் அண்ணன் போலீஸ் கதைகளை ‘தி காப் ஸ்டோரி’ எனும் பெயரில் எடுக்கத் துவங்கினார் என்றால் ச்சும்மா திரை தெறிக்கும். 
ஆனால் யார் கண்ணு பட்டுதோ தெரியவில்லை, கடந்த சில வருடங்களாகவே கெளதமின் ஜாதகம் சரியில்லை.

தனுஷ், விக்ரம் என செம்ம ஹீரோக்களை வைத்து அவர் இயக்கிய படங்கள் ரிலீஸுக்கு வராமல் முடங்கியே கிடக்கின்றன. அவர் தயாரித்த படமும் அதுக்கு மேல் பெரிய பஞ்சாயத்தில் சிக்கிக் கிடக்கிறது. 
இந்த நிலையில் வெப் சீரீஸ் பக்கம் தலைவைத்தார் கெளதம். எப்போதுமே ஒரு வைபரேஷனை கிளப்பும் வகையிலான  கதைகளை டீல் பண்ணுவதுதான் கெளதமின் ஸ்டைல். வெப் சீரிஸிலும் அப்படித்தான், அண்ணன் கை வைத்திருப்பது பெரிய இடத்து கான்செப்டை. ஆம், ஜெயலலிதா கதையை வெப்சீரிஸ் ஆக்கி இருக்கிறார். 


ஜெ.,வாக ரம்யாகிருஷ்ணன், சசிகலாவாக விஜி சந்திரசேகர், எம்.ஜி.ஆர். ஆக இந்திரஜித், சோபன் பாபுவாக வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரீஸ் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என இன்னும் சில தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறதாம். 
இந்த சீரீஸ் விவகாரம் இல்லாமல்ன் வெளியாகும், தனக்கு பணம் வந்து சேரும், சினிமா பஞ்சாயத்துக்களை முடித்துவிட்டு மீண்டும் பெரிய திரையில் கோலோச்சலாம்! என நினைத்தார் கவுதம். ஆனால் அதற்கு  ஆப்பு வந்துவிட்டது. 


அதாவது, யாரைக் கேட்டு ஜெயலலிதாவின் கதையை வெப் சீரீஸாக்கினார் கவுதம்? எங்களின் அனுமதி பெறவே இல்லையே! ஆகவே அதை வெளியிட அனுமதிக்க மாட்டோம்! என்று மூன்று தரப்புகளில் இருந்து கவுதமுக்கு நெருக்கடி முற்றியிருக்கிறதாம். 
ஒன்று அ.தி.மு.க. தரப்பு, இன்னொன்று அ.ம.மு.க., மற்றொன்றோ தீபா. இரண்டு கட்சிகள்ம் அரசியல் ரீதியாக இந்த விவகாரத்தை அணுகி கவுதமை கலங்கடிக்கிறார்களாம். ஆனால் தீபாவோ ‘அவர் என் சொந்த அத்தை, அவர் பெயரை டேமேஜ் செய்ய அனுமதிக்க முடியாது. அத்தை ஜெயலலிதாவின்  நேரடி ஒரே சொந்தமான என்னிடம், அவர் கதையை வைத்து வெப் சீரீஸை எடுக்க அனுமதி பெறவில்லை. அதில் எந்தளவுக்கு பர்ஷனலாகவும், அரசியல் ரீதியிலும் அவரை டேமேஜ் செய்துள்ளார் என்றும் தெரியவில்லை. எனவே இதை அனுமதிக்க முடியாது. தேவைப்பட்டால் நான் நீதிமன்றம் கூட போவேன்.’ என்கிறாராம் தீபா. 
இரு கட்சிகளை கூட சமாதானம் செய்துவிடலாம் போல, ஆனால் பேபிம்மா கிளப்பும் புயலைத்தான் எப்படி சமாளிக்கப்போகிறோம்!? என புரியாமல் கலங்கிக் கிடக்கிறாராம் கவுதம். 
சினிமாவில் டெரர் வில்லன் கதாபாத்திரங்களை வடிவமைத்து தெறிக்கவிட்டவர் கவுதம், ஆனால் ரியலில் இந்த மருமகள் அவரை மண்டை காய வைக்கிறாராம். பேசாம பேபியை அவரோட கேரக்டர்லேயே நடிக்க வைங்க மேனன் சார். 
அவ்வ்வ்!......

click me!