எம்ஜியாரை நெருங்க முடியாமல் திணறும் தமிழ் ஹீரோக்கள்..!! தலைவர் மறைந்தாலும் அவரை அடிச்சிக்க ஆள் இல்லை..!!

By Asianet Tamil  |  First Published Sep 11, 2019, 5:27 PM IST

கோடியில் சம்பளம் வாங்கும் டாப் ஹீரோக்கள் என்று சொல்லிக் கொண்டாலும் மக்களின் இதயங்களை வென்ற எம்ஜிஆரின் பெயரைச் சொல்லியாவது வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டும் அளவில்தான் தமிழ்த் திரை ஹீரோக்கள்  உள்ளனர். 


மக்கள் திலகம் , புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் நடிப்பில், மக்கள் புகழில் அவரை மிஞ்சும் அளவிற்கு இன்னும் தமிழித்திரையில் கதாநாயகர்கள் உருவாகவில்லை என்ற நிலையே உள்ளது. எம்ஜிஆர் நடித்து பெயர் வாங்கிய தலைப்புகளை தங்கள் படத்திற்கு வைப்பதில் இளம் கதாநாயகர்களிடேயை கடும் போட்டி நிலவுவதே இதற்கு காரணம்.

அசுரன் படத்தை முடித்த கையோடு இயக்குனர் சுப்புராஜ்ஜின் மற்றொரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் தனுஷ். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடிக்க உள்ளார். படத்தின் பெரும்பாலான பகுதி லண்டனில் படமாக்கப்பட இருக்கிறது. அப் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன்  என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. எம்ஜிஆர், லதா நடித்த உலகம் சுற்றும் வாலிபன்  கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் பெரும் சாதனை நிகழ்த்திய பெருமை இப்படத்திற்கு உண்டு. இந்த படத்தின் தலைப்பை பெறும் முயற்ச்சியில் தனுஷ் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே. எம்ஜிஆரின் நாடோடி மன்னன், ரகசிய போலீஸ், என்ற பெயர்களில் படங்கள் வந்துள்ளது. இந்த நிலையில் எங்கள் வீட்டுப் பிள்ளை என்ற பெயரை நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது எனவே இடையில் படத்தின் பெயரை நம்ம வீட்டு பிள்ளை  என்று அவர்கள் பெயர்மாற்றிவிட்டனர். 

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் தலைப்பை வைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் அது குறித்து கூறிய தயாரிப்பாளர் சாய் நாகராஜ், எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை டிஜட்டலில் புதிப்பித்து வருகிறோம் விரைவில் படம் புதுப்பொலிவுடன் திரைக்கு வர உள்ளது  என்றார். படத்தின் உரிமை தன்னிடத்தில் உள்ளது அதை யாருக்கும் எப்போதும் தரமாட்டேன் என்று அவர் காராரக கூறியுள்ளார் இந்த நிலையில் தனுஷ் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என்ற தலைப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

என்னதான் கோடியில் சம்பளம் வாங்கும் டாப் ஹீரோக்கள் என்று சொல்லிக் கொண்டாலும் மக்களின் இதயங்களை வென்ற எம்ஜிஆரின் பெயரைச் சொல்லியாவது வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டும் அளவில்தான் தமிழ்த் திரை ஹீரோக்கள்  உள்ளனர். எம்ஜிஆர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரின் உச்சத்தை நெருங்க கதாநாயகர்கள் இன்னும் பிறக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
 

click me!