விஜே சித்ரா இறப்பதற்கு முன் நடந்தது என்ன? வெளியான வைரல் சிசிடிவி காட்சிகள்... பரபரப்பை ஏற்படுத்திய ஆதாரங்கள்.!

Published : Dec 22, 2020, 09:41 AM IST
விஜே சித்ரா இறப்பதற்கு முன் நடந்தது என்ன? வெளியான வைரல் சிசிடிவி காட்சிகள்... பரபரப்பை ஏற்படுத்திய ஆதாரங்கள்.!

சுருக்கம்

நடிகை சித்ரா பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வெளியாகி கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக சக நடிகையான சரண்யா மற்றும் அண்டை வீட்டில் வசிப்பவர்களிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.  

நடிகை சித்ரா பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வெளியாகி கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக சக நடிகையான சரண்யா மற்றும் அண்டை வீட்டில் வசிப்பவர்களிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

சின்னத்திரை நடிகையான சித்ரா, சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 9-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத்தை போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணை நடத்திவருகிறார். இதுவரை சித்ராவின் தாய், தந்தை, மாமனார், மாமியார் உள்ளிட்டோரிடம் விசாரணையை முடித்துள்ளார்.

முன்னதாக சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன், அதாவது ஹேமந்த்தின் தந்தை உதவி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அதில், விசாரணை ஒரே பக்கமாக நடப்பதாகவும், விசாரணையை வேறு கோணங்களில் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சித்ரா போனுக்கு பல பிரமுகர்களிடமிருந்து அழைப்பு வரும். ஏன் இப்படி அழைப்பு வந்தது? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் போலீசிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சித்ராவின் இன்னொரு பக்கம் குறித்து ரவிச்சந்திரன் பல தகவல்களை புகாரில் கூறியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சித்ரா பற்றி ரவிச்சந்திரன் இவ்வாறு கூறியிருக்க கூடாது என்று சித்ரா ரசிகர்கள் சமூக ஊடகங்களில் குமுறி வருகிறார்கள். இதன் பிறகு ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில், ‘’திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மண்டபம் பார்க்க சென்றோம். அப்போது சித்ராவும் எங்களுடன் வந்தார். அவர் இறப்பதற்கு 1 நாள் முன்பு மாலையில்தான் மண்டபம் பார்க்கச் சென்றோம். மண்டபத்தில் பதிவான அந்த சிசிடிவி காட்சி எங்களிடம் உள்ளது.

அதில் சித்ரா எங்களிடம் சந்தோஷமாக பேசியபடி வருகிறார். அப்புறம் எப்படி தற்கொலைக்கு தூண்டியதாக கூற முடியும்? சித்ரா செல்போனுக்கு யார் யாரிடமிருந்து கால் வந்தது? அவரை யார் யார் தொடர்பு கொண்டார்களோ அதைப் பற்றி விசாரிக்க வேண்டும். ஆர்டிஓ விசாரணை துவங்கும் முன்பாக போலீசார் முன்கூட்டியே ஹேமந்தை கைது செய்தது ஏன் என்று தெரியவில்லை. விசாரணைக்கு ஒத்துழைத்தும் திடீரென கைது செய்யப்பட்டார். எனவே, விரிவான விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார் அவர்.

சித்ரா மாமனார் அளித்த வீடியோ காட்சியில், ஹேமந்த் மற்றும் சித்ரா இருவரும் ஆடி காரிலிருந்து இறங்கி மண்டபத்திற்குள் செல்லும் காட்சிகள் உள்ளன. 
மண்டபத்திற்கு உள்ளே பதிவான காட்சிகளும் உள்ளன. அதில் சித்ரா பதற்றம் இல்லாமல் இயல்பாகத்தான் ஹேமந்த் மற்றும் குடும்பத்தாரிடம் பேசியபடி செல்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மனோஜை மடக்க ரோகிணி போட்ட மாஸ்டர் பிளான்... முத்துவிடம் மன்னிப்பு கேட்ட ரவி - சிறகடிக்க ஆசை அப்டேட்
ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேவசகாயம்... அடிச்சு தூக்க சொன்ன ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்