
மலையாள திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் அன்னா பென். கும்பலங்கி நைட்ஸ், ஹெலன் உள்ளிட்ட படங்கள் மூலமாக பிரபலமானவர். அன்னா பென் நடிப்பில் வெளியான நடிப்பில் வெளியான கப்பெல்லா திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தின் கன்னட ரீமேக்கில் தான் குட்டி நயன் அனிகா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அன்னா பென் தனக்கு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த கொடுமை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பதிவில், சோசியல் மீடியாவில் அடிக்கடி கோபத்தை காட்டுபவள் நானல்ல. ஆனால் இன்று நடந்த விஷயத்தை என்னால் சாதாரணமாக விட்டு விட முடியவில்லை. கூட்டம் இல்லாத லுலு சூப்பர் மார்க்கெட்டில் இரண்டு இளைஞர்கள் என்னை பின் தொடர்ந்து வந்து, எனது பின்னால் தட்டினார்கள். நான் அப்போது அதிர்ச்சி ஆகிவிட்டேன். என்னால் எந்த எதிர்வினையும் செய்ய முடியவில்லை. அதை பார்த்த அருகில் இருந்த என் சகோதரி வேகமாக வந்தார். என்னிடம் நீ ஓ.கோ.வா? எனக்கேட்டார். அவர்கள் வேண்டுமென்றே தான் செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரிந்தது. என் அம்மாவும், சகோதரரும் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்ததால் நாங்கள் பில் போடும் இடத்திற்கு சென்றோம்.
அப்போது அந்த நபர்கள் எங்கள் அருகே வந்தார்கள். நான் நடித்த படங்களின் பெயர்களைப் பற்றி கேட்டார்கள். நான் அப்போது பதில் எதுவும் பேசவில்லை. இதை இங்கு எழுதும் போதும் எனக்கு தோன்றுகிறது. இப்படி சொல்லியிருக்கலாமே, செய்திருக்கலாமே என்று பல யோசனை வருகிறது. பெண்ணாக இருந்து சோர்ந்துவிட்டேன். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எல்லாம் கவனமுடன் இருக்க வேண்டியுள்ளது. குனியும் போதும், திரும்பும் போதும் உடையை கவனிக்க வேண்டியுள்ளது. என் அம்மா, சகோதரியை நினைத்து நான் கவலைப்படுகிறேன். ஆண்கள் எங்களது பாதுகாப்பை பறித்துவிட்டீர்கள். எப்போதாவது நீங்கள் பெண்களிடம் மோசமாக நடந்திருந்தால் நரகம் தான் என ஆவேசமாக பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, கொச்சி போலீஸ் கமிஷனருக்கு சென்றதை அடுத்து அவர் சம்மந்தப்பட்ட பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு பார்வேட் செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்தனர். மலப்புரம் பகுதியை இர்ஷத், ஆதில் என்பது தெரிய வந்தது. அவர்கள் எதுவும் வாங்காமல், சும்மா அந்த மாலில் சுற்றி வந்துள்ளனர். இதையடுத்து அவர்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர். மாஸ்க் அணிந்திருப்பதால் முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.