
இயக்குநர் சுசீந்திரனிடம் கதையை கேட்ட 30 நிமிடத்திலேயே இதுதான் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸிற்கு ஏற்றப்பட்ட படம் சிம்பு ஓ.கோ. சொன்ன படம் தான் ஈஸ்வரன். இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையைக் கூட கணிசமாக குறைத்து மன்மதன் லுக்கிற்கு மாறினார். இயக்கு படத்தை பொங்கலுக்கு வெளியிட உள்ளதாக அறிவித்த சுசீந்திரன் ஒரே மாதத்தில் ஷூட்டிங்கை முடித்தார். அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
ஈஸ்வரன் படத்திற்கு டப்பிங் பேசி முடித்த கையோடு சிம்பு மாநாடு படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். மாநாடு படத்தில் நடித்தாலும் ஈஸ்வரன் குறித்து அவ்வப்போது அப்டேட் வெளியிட்டு வருகிறார் சிம்பு. மேலும் தன் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இன்று மாலை ஈஸ்வரன் பட அப்டேட் வரும் என்று சுசீந்திரன் ட்வீட் செய்தார். அந்த ட்வீட்டை பார்த்த சிம்பு ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால் தற்போது சுசீந்திரனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மாலையாகியும் அப்டேட் வராததால் சுசீந்திரனின் அக்கவுண்டை செக் செய்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்ன கொடுமை சார் இதெல்லாம்... அப்டேட் தர்றேன்னு சொன்னவர் அக்கவுண்ட் இப்படி ஆகிடுச்சே என சிம்பு ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.