மே 5-ஆம் தேதி, நாடு முழுவதும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி' படத்தை மேற்கு வங்கத்தில் தடை செய்வதாக அறிவித்துள்ளார் அம் மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டீசர் வெளியான போதே, இந்த படத்தை வெளியிடக் கூடாது என பல்வேறு தரப்பில் இருந்து குரல் எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டது. குறிப்பாக ஏற்கனவே ஒருமுறை இப்படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், இரண்டாவது முறையாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, படத்தின் வெளியீட்டு விஷயத்தில் தலையிட முடியாது என கூறியதோடு, இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் குறித்தும் எண்ணிப் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். அதே இப்படத்திற்கு எதிராக எத்தனை வழக்குகள் தான் தொடர்வீர்கள் என கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
வயல் வெளியில்.. கண்ணாடி முன் பிரியங்கா மோகன்! வித்யாசமான போட்டோ ஷூட் !
இப்படம் வெளியானதில் இருந்தே, தினம் தோறும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருவதை பார்த்து வருகிறோம். அதற்க்கு முக்கிய ககாரணம் இப்படத்தின் கதைக்களம் தான். அதாவது கேரளாவை சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்களை வெளிநாட்டுக்கு வேலைக்காக அழைத்துச் சென்று கட்டாய மதமாற்றம் செய்து, ஐ எஸ் ஐ எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளில் பயன்படுத்தியது குறித்து காட்டப்பட்டிருந்தது.
இப்படத்தை வெளியிட பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தமிழகத்தில் இப்படத்தை திரையிட்டால் பிரச்சினைகள் வெடிக்கும் என கருதி என மல்டி பிளக்ஸ் மால்களில் மட்டுமே இப்படம் திரையிடப்பட்டது. படம் திரையிட படும் இடங்களில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் விதமாக, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்பும் வழங்க பட்டது. மேலும் இப்படம் வெளியாகி 3 நாட்களே ஆகும் நிலையில், இன்று முதல் தமிழகத்தில் இப்படத்தை திரையிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளனர். சட்ட ஒழுங்கு மற்றும் பார்வையாளர்கள் வரவில்லை என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராக குரல் எழுப்பிய போதும் யாருமே இப்படத்தை தடை செய்யவில்லை. ஆனால் முதல் முறையாக, மேற்கு வங்க மாநிலத்தில் தடை செய்வதாக அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி. இது குறித்து அவர் கூறியுள்ள விளக்கத்தில், வெறுப்பு மட்டும் வன்முறை ஏற்படக்கூடாது என்பதற்காக இப்படத்தை தன் மாநிலத்தில் தடை செய்வதாக அறிவித்துள்ளார்.