தோல்விகள் வாழ்க்கையில் இயல்பு தான்..! +2 முடித்த ஏழை மாணவர்கள் மேற்படிப்புக்கு உதவி கரம் நீட்டும் விஷால்!

Published : May 08, 2023, 10:10 PM IST
தோல்விகள் வாழ்க்கையில் இயல்பு தான்..! +2 முடித்த ஏழை மாணவர்கள் மேற்படிப்புக்கு உதவி கரம் நீட்டும் விஷால்!

சுருக்கம்

நடிகர் விஷால், +2 முடித்து விட்டு மேற்படிப்பு படிக்க வசதி இல்லாமல் கஷ்டப்படும் ஏழை மாணவர்கள் படிப்புக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

கடந்த மார்ச் மாதம் 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு தொடங்கிய நிலையில்,  இதில் தமிழகம் முழுவதும் உள்ள 8.17 லட்சம் மாணவர்கள் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் இன்று  +2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி 8,03,385 தேர்வர்கள் தேர்வு எழுதியதில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.03% ஆகும். மாணவர்கள் 91.45%, மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்களை விட மாணவிகள் 4.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  97.85% தேர்ச்சி சதவீதத்துடன் விருதநகர் மாவட்டம் முதலிடம் பிடித்தார்.

ஜவான் பட தாமதத்திற்கு என்ன காரணம்? நயன் - விஜய் சேதுபதி குறித்து ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக கூறிய ஷாருக்கான்!

இந்நிலையில் இதில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கும் விதமாக புரட்சி தளபதி விஷால் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் மனம் தளராமல் இருக்க வேண்டும் என்றும் தோல்விகள் வாழ்க்கையில் இயல்பு தான். ஆகையால் எந்த விதத்திலும் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து படித்து, மறுதேர்வில் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கும், அன்பான சொந்தங்களுக்கும் வணக்கம். வருடம்தோறும் பிளஸ்+2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, மேற்கொண்டு படிக்க இயலாத வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளை நமது அண்ணன் புரட்சி தளபதி விஷால் அவர்கள் தனது 'தேவி அறக்கட்டளை' மூலம் படிக்கவைத்து வருகிறார். அதேபோன்று  இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்களின் பதிவு நடைபெற்று வருகிறது.

குடும்ப வழக்கத்தை தூக்கி எறிந்த மனோ பாலாவின் மனைவி! கணவர் இறந்த ஒரே வாரத்தில் செய்த நெகிழவைக்கும் செயல்!

நமது மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் உங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பிளஸ்+2 பொதுத் தேர்வில்  நல்ல மதிப்பெண் வாங்கி, தேர்ச்சி பெற்று மேற்கொண்டு படிக்க முடியாத மாணவ, மாணவிகள் குறித்த முழு விபரங்களையும் நமது 'தேவி அறக்கட்டளை' மின்னஞ்சல் devifoundationchennai@gmail.com  முகவரிக்கு அனுப்புங்கள். அவர்களின் மனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டு, அவர்களின் மேற்படிப்பிற்கு உதவிகள் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே விஷால் தன்னுடைய அம்மா பெயரில் இயங்கி வரும் தேவி அறக்கட்டளை மூலம் ஏழை - எளிய மாணவ, மாணவிகளை படிக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?