
தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டின் ஆரம்பமே ஜாக் பாட் அடித்துள்ளது என்று தான் சொல்லணும், ஆமாம், அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட இரண்டு படங்களுமே கடந்த 10 ஆம் தேதி வெளியாகி வசூலில் சக்கப்போது போட்டு வருகிறது. அதுவும் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் விஸ்வாசம் படத்திற்கு தமிழகம் முழுவதுமே தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஸ்வாசம் லோக்கல் தியேட்டர்களிலும், வெளிநாட்டிலும் 70% முதல் 80% வரை கூட்டம் வந்துகொண்டிருக்கின்றன என தியேட்டர் உரிமையாளர்கள் தங்களது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து வரும் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ 150 கோடிகளை தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.
மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் "விஸ்வாசம்" சென்னை தாம்பரத்தில் உள்ள வித்யா தியேட்டரில் இதுவரை 35 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாம். அதிலும் முந்தய படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளையும் முறியடித்து விட்டதாம். இன்னும் வரப்போகும் நாட்களில் புதிய சாதனைகளை நிகழ்த்தும் என சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.