விவாகரத்துக்கு பின் கணவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு காஜல் செய்த விஷயம்! வெளியானது புகைப்படம்?

Published : Jan 25, 2019, 02:04 PM ISTUpdated : Jan 25, 2019, 02:32 PM IST
விவாகரத்துக்கு பின் கணவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு காஜல் செய்த விஷயம்! வெளியானது புகைப்படம்?

சுருக்கம்

திரைபிரபலங்கள் திருமணமாகி, விவாகரத்து பெற்று விட்டாலும் பட விழாக்கள், மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவ்வப்போது பொது இடங்களில் சந்திக்கும் நிகழ்வுகள் அதிகம். இதனால் குடும்ப வாழ்க்கையில் உள்ள கருத்து வேறுபாட்டை, மறந்து ஒரு சிலர் நண்பர்களாக மாறி விடுகிறார்கள்.  

திரைபிரபலங்கள் திருமணமாகி, விவாகரத்து பெற்று விட்டாலும் பட விழாக்கள், மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவ்வப்போது பொது இடங்களில் சந்திக்கும் நிகழ்வுகள் அதிகம். இதனால் குடும்ப வாழ்க்கையில் உள்ள கருத்து வேறுபாட்டை, மறந்து ஒரு சிலர் நண்பர்களாக மாறி விடுகிறார்கள்.

அந்த வகையில் நடன இயக்குனர் சாண்டி, அவருடைய முதல் மனைவி காஜலிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த பின் தற்போது மகளை வாழ்த்துவதற்காக வீட்டிற்கு அழைத்து பெருமைப்படுத்தியுள்ளார்.

பிரபல தனியார் தொலைகாட்சி மூலம், தொகுப்பாளினியாக அனைவராலும் அறியப்பட்டவர் காஜல். சின்னத்திரையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்ததால், சீரியல், மற்றும் திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார். மேலும் ஒரு சில நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சில விமர்சனங்களை சந்தித்தார்.

இவர், பிரபல நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்படவே, இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை விவாகரத்து பெற்று முறித்து கொண்டனர்.

காஜலை பிரிந்ததும் சாண்டி, தன்னுடைய தீவிர ரசிகை சில்வியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாண்டியின் திருமணத்தை பார்க்க முடியாமல் காஜல் அதிரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் பிக்பாஸ் முதல் சீசனில் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் எந்த எதிர்மறையான விமர்சனங்களையும் சந்திக்காமல் வெளியேறிய ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

இந்நிலையில் தற்போது காஜல் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சாண்டியின் இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் காஜல் அமர்ந்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளது, சாண்டி மற்றும் சில்வியா இருவரும் தங்களுடைய மகளை பார்க்க தனக்கு அழைப்பு விடுத்தால், அதனை ஏற்று கொண்டு  சந்தித்தாக தெரிவித்துள்ளார். குழந்தைக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒன்னில்ல ரெண்டில்ல அடுத்தடுத்து 5 புது சீரியல்களை களமிறக்கும் சன் டிவி - அதன் முழு லிஸ்ட் இதோ
விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ