’இந்த நாட்டோட காவல்கார பிரதமரை இவ்வளவு கேவலமாவா கிண்டல் அடிப்பீங்க மிஸ்டர் வாட்ச்மேன்?...

Published : Mar 18, 2019, 05:15 PM IST
’இந்த நாட்டோட காவல்கார பிரதமரை இவ்வளவு கேவலமாவா கிண்டல் அடிப்பீங்க மிஸ்டர் வாட்ச்மேன்?...

சுருக்கம்

பிரதமர் மோடி தனது டுவிட்டரில் காவலாளி நரேந்திர மோடி என பெயரை மாற்றினார். அவர் நேற்று வெளியிட்ட பதிவில் இருந்த ’நானும் காவலாளிதான்’ என்ற வீடியோ டுவிட்டரில் நம்பர் ஒன் டிரண்டிங்காக இருந்தது.

மேடம் தமிழிசைக்கு பி.பி. எகிறும் வகையில் பிரதமர் மோடியை பயங்கர பங்கம் செய்து ஒரு தமிழ்ப் பட டிசைன் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி தனது டுவிட்டரில் காவலாளி நரேந்திர மோடி என பெயரை மாற்றினார். அவர் நேற்று வெளியிட்ட பதிவில் இருந்த ’நானும் காவலாளிதான்’ என்ற வீடியோ டுவிட்டரில் நம்பர் ஒன் டிரண்டிங்காக இருந்தது. அவரைத் தொடர்ந்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, ஹர்ச வர்த்தன், தர்மேந்திர பிரதான் ஆகியோர் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார்(காவலாளி) என்ற பெயரை சேர்த்தனர்.

இதற்கு நாடு முழுக்க வரவேற்பும் நக்கல்களும் கிளம்பின. இந்நிலையில் பா.ஜனதா தலைவர்களின் இந்த செயலை கிண்டல் செய்யும் வகையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தின் போஸ்டரில் ஸ்டைலாகப் போஸ் கொடுக்கும்  நாய் ஒன்று  ‘நானும் காவலாளிதான்’ என்று சொல்வது போல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டதா அல்லது ரசிகர்கள் உருவாக்கியதா என்ற விபரம் தெரியவில்லை.

இயக்குநர் விஜய் இயக்கியுள்ள ’வாட்ச்மேன்’ என்ற அந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், காமெடி நடிகர் யோகி பாபுவுடன்  அந்த நாயும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறது. படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. ஏற்கனவே ‘எங்க ஊரு காவல்காரன்’, ‘பூந்தோட்டக் காவல்காரன்’ போன்ற படங்களை வைத்து பி.ஜே.பி. மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகம் முழுக்க மீம்ஸ்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ‘வாட்ச் மேன்’ போஸ்டர் தமிழக பி.ஜே.பி. தலைவர்களின் பி.பி.யை உச்சத்துக்குக் கொண்டு செல்வது உறுதி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!