
காலை நேரங்களில், தனியாக நடைப்பயிற்சியில் ஈடுபடும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த சினிமா கேமராமேன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பகுதிகளில் அதிகாலை வேளையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் பெண்களை தாக்கி சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வந்ததாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதை அடுத்து பரங்கிமலை போலீஸ் கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் மேற்பார்வையில் தனிப்படை, போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அது அவர் கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த பாரதி என்பதும், இவர் தொடர்ந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
மேலும், இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் என்றும், சினிமாவில் உதவி கேமரா மேனாக வேலை பார்த்து வந்ததாக பொய் சொல்லி இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் அவர் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
பள்ளிக்கரணை பகுதிகளில் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்லும் பெண்களை தாக்கி சங்கிலி பறிப்பு ஈடுபட்டது தெரியவந்த பாரதியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 18 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.