சந்தனுவின் கொழுந்தியாவை பார்த்துள்ளீர்களா?..வைரலாகும் கிகி சகோதரியின் புகைப்படம்

Published : Sep 14, 2022, 08:28 PM IST
சந்தனுவின் கொழுந்தியாவை பார்த்துள்ளீர்களா?..வைரலாகும் கிகி சகோதரியின் புகைப்படம்

சுருக்கம்

தற்போது கீர்த்தியின் சகோதரி குறித்த தகவலும் வைரல் ஆகி வருகிறது.

வாரிசு நடிகரான சாந்தனு தனது தந்தையின் வேட்டிய மடிச்சு கட்டு படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் நாயகனாக நடித்த சக்கரகட்டி படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு இவருக்கு பிலிம் பேர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்று கொடுத்தது. தொடர்ந்து மலையாளத்தில் ஒரு படமும் தமிழில் ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவக்கதைகள், குரு, கசடதபர முருங்கக்காய் சிப்ஸ் என பல படங்களில் நடித்தார்.

தற்போது ராவண கூட்டம் என்னும் படத்தில் நடித்து வருகிறார் சாந்தனு. ஆனால் இவருக்கு இதுவரை போதுமான வெற்றிகள் கிடைக்கவில்லை என்று கூறலாம். டாப் நாயகன் முயற்சியில் இருக்கும் சாந்தனு பாக்யராஜ். சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளனியாக இருக்கும் கீர்த்தியை கடந்த 2015 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு.. தனுஷ்..விஜய் சேதுபதியை ஒப்பிடுகையில் இது ஒரு விஷயமே இல்லை..உருவக்கேலி குறித்து ஆதங்கப்பட்ட சூர்யா பட நாயகி

மேலும் செய்திகளுக்கு.. தயாரிப்பாளரிடம் மோசமாக நடந்து கொண்ட இயக்குனர் பாலா..வெளியான திடுக்கிடும் தகவல்

 கீர்த்தி தற்போது பிரபல தொகுப்பாளனியாக இருந்து வருகிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு இவர் தான் தொகுப்பாளர். முன்னதாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தார் கிகி. இந்நிலையில் தற்போது அவ்வப்போது இந்த ஜோடியின் அழகான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தை நிரப்புவது வழக்கம். அந்த வகையில் தற்போது கீர்த்தியின் சகோதரி குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..1000 எபிசோடுகளை கடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்...மாஸாக கொண்டாடிய சீரியல் டீம்

முன்னதாக சாந்தனுவின் அம்மா பூர்ணிமா மற்றும் கீர்த்தியின் தாயார் கலந்து கொண்ட ரியாலிட்டி ஷோவின் ப்ரோமோ ஒன்று வைரலான நிலையில் தற்போது கீர்த்தியின் சகோதரி குறித்த தகவலும் வைரல் ஆகி வருகிறது.  கீர்த்தி தற்போது சென்னையில் பிரபல நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!