'வெந்து தணிந்தது காடு' படத்திற்காக சிம்பு செய்த செயல்..! கண் கலங்கிய டி.ராஜேந்தர் ..!

By manimegalai aFirst Published Sep 14, 2022, 3:34 PM IST
Highlights

வெந்து தணிந்தது காடு படத்திற்காக, சிம்பு செய்த செயலால் மனம் வருந்தி கண் கலங்கியதாக தந்தை என்கிற பேரன்போடு கூறியுள்ளார் டி.ராஜேந்தர்.
 

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான, 'விண்ணை தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய இரண்டு படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்பு, மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்து 'வெந்து தணிந்தது காடு' படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளதாக கூறப்படும் இந்த படத்தை, வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இதன் முதல் பாகம் செப்டம்பர் 15ஆம் தேதி அதாவது நாளை திரைக்கு வர உள்ளது. எனவே படக்குழுவினர் தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த படத்தில் நாயகியாக சித்தி இத்னானி, நாயகனின் அம்மாவாக ராதிகா சரத்குமார் உள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: Viral Video: இவரை சந்திக்க வேண்டும்.. ஆனால் எப்படி..? கியூட் பேபியின் வீடியோ வெளியிட்டு உருகும் ராஷ்மிகா!
 

இந்த படத்திற்காக சிம்பு, தன்னுடைய எடையை குறித்து... நடித்துள்ளார். இதற்காக சிம்பு செய்தவற்றை கூறி கண் கலக்கியுள்ளார் டி.ராஜேந்தர். இதுகுறித்து டி.ஆர்.கூறுகையில்... "பொதுமக்கள் வெந்து தணிந்தது காடு' படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கூறி, 'இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்பு பல நாட்கள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தார். இந்த கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியுமா என கவலையுடன் கேட்டார். நான் முடியும் என நம்பிக்கை அளித்தேன். ஒரு தந்தையாக அவர் தன்னுடைய உடலை வருத்தியது எனக்கு வலித்தது என கண் கலங்கியபடி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: ரவீந்தரிடம் இது தான் பிரச்சனை! மகாலட்சுமி கூறிய அதே விஷயத்தால் தான் முதல் மனைவி விவகாரத்து பெற்று பிரிந்தாரா?
 

மேலும் சிம்பு இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது தான்...  டி ராஜேந்தருக்கு திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டது. சென்னையில் சில நாட்கள் சிகிச்சை எடுத்து கொண்ட அவர், மேல் சிகிஸாஹிய்காக வெளிநாடு சென்று, சுமார் ஒரு மாதம் சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர், சென்னை திரும்பினார். சில நாட்கள் தொடர்ந்து ஓய்வில் இருந்த அவர், மீண்டும் தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

click me!