முதல்வார முடிவில் வசூல் சாதனை செய்தது யார்? வெளியானது ரிப்போர்ட்

By sathish kFirst Published Jan 16, 2019, 2:26 PM IST
Highlights

ரஜினியின் பேட்ட படம் 150 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அதே போல் அஜித் நடித்த விஸ்வாசம் படம் 100 கோடி வசூல் சாதனையில் இணைந்துள்ளது. 

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 10ஆம் தேதி  ரஜினி நடித்த பேட்ட திரைப்படம்,  அஜித் நடித்த விஸ்வாசம் படமும் திரைக்கு வந்தது. பொங்கலுக்கு இரு முக்கிய நடிகர்கள் திரையில் களம் கண்ட நிலையில் எந்தப்படம் முதலிடம் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு தியேட்டர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் நிலவியது.

இரு படங்களும் ஒரே அளவில் வியாபாரம் செய்யப்பட்டிருந்தது. மீடியா என்கிற பலம் பேட்ட படத்திற்கு "சன் பிக்சர்ஸ்" மூலம் பக்கபலமாக இருந்தது. இது போன்ற கூடுதல் பலம் விஸ்வாசம் படத்திற்கு இல்லை. அஜித் என்ற ஒன்மேன் ஷோ மட்டுமே, படம் பார்த்தவர்கள் விளம்பரப்படுத்தும் யுக்தி நடந்து வருகிறது. 

பொங்கல் பந்தயத்தில்,  பேட்ட உடன் தமிழகத்தில் நேருக்கு நேர் மோதியது விஸ்வாசம் படம். இரு படங்களுமே வசூல் ரீதியாக தோல்வியை சந்திக்கவில்லை. அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் வசூலில் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. உலக அளவில் பேட்ட திரைப்படம் வசூலில் முதலிடத்தில் இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அஜித்தின் விஸ்வாசம் வசூலில் கொடிகட்டிப் பறக்கிறது என்ற தகவலை ரஜினிகாந்த் தரப்பும் அதை விட சன் பிக்சர்ஸ் தரப்பும் ரசிக்கவில்லை.

2.0 படம் வெளியாகி இரு மாதங்களுக்குள் ரஜினியின் அடுத்த படம் வெளியாகி ரசிக்கற்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல ஊடக தகவலின் படி தமிழகத்தில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் அதிக வசூலை குவித்துள்ளது.  

தமிழகத்தை தாண்டி மற்ற அனைத்து இடங்களிலுமே ரஜினியின் கை பல மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் மட்டும் விஸ்வாசம் எப்படியும் ரூ 60 கோடி வரை  வசூலித்துள்ளதாம், பேட்ட ரூ 48 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்திருக்கும் என தெரிகின்றது. மேலும், இன்னும் விடுமுறை முடியாததால், அடுத்த நான்கு நாட்களில் எப்படியும்  இரண்டு மடங்காகும் எனது தெரிகிறது.

click me!