
தனது காதல் மற்றும் திருமணம் தொடர்பாக பல்லாயிரக்கணக்கான வதந்திகளுக்கு விடைகொடுத்து ஒருவழியாக நிஜ மணப்பெண்ணை அறிவித்துவிட்டார் விஷால். மணப்பெண் ஆந்திர சினிமாவில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்துவந்தவர் என்பது அதிர்ச்சி செய்தி.
யெஸ் 2016ல் வெளிவந்த ‘பெல்லி சூப்புலு’ என்ற தெலுங்குப்படத்தில் நாயகியின் தோழியாக ஒரு சிறிய வேடத்தில் நடித்த அனிஷா அல்லா ரெட்டி, அடுத்து மிகப்பிரபலமான ‘அர்ஜூன் ரெட்டி’ உள்பட சில படங்களில் குட்டி குட்டிப் பாத்திரங்களில் நடித்துள்ளார். இது பெற்றோரால் அங்கீகரிக்கப்பட்ட காதல் திருமணம் என்று சொல்லப்படுகிறது.
இச்செய்தியை ஊர்ஜிதம் செய்த விஷால் “ஆம், நான் மகிழ்ச்சியாக உள்ளேன்; அவள் பெயர் அனிஷா அல்லா. என் வாழ்க்கையின் மிக முக்கியமான அடுத்தக்கட்டம்; விரைவில் தேதியை அறிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
விஷாலின் இந்த அறிவிப்பை ஒட்டி நண்பர்கள் ட்விட்டரில் அவரை வெகுவாக கலாய்த்துவருகின்றனர்.நடிகர் விஷ்ணு விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் விஷாலின் திருமண செய்தியை பகிர்ந்து, ”முதல் ஆடு ரெடி ஆயிடுச்சு; அடுத்த ஆடு ஆர்யாதான். சரிதானே விக்ராந்த்..?” என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.