இப்படி பெரிய பையனாக வளர்ந்து விட்டாரா நடிகர் விஷ்ணு விஷால் மகன் ஆர்யன்!

Published : Apr 04, 2019, 06:40 PM IST
இப்படி பெரிய பையனாக வளர்ந்து விட்டாரா நடிகர் விஷ்ணு விஷால் மகன் ஆர்யன்!

சுருக்கம்

நடிகர் விஷ்ணு விஷால் மகன் வளர்ந்த பின்பு முதல் முறையாக ஆர்யனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  

நடிகர் விஷ்ணு விஷால் மகன் வளர்ந்த பின்பு முதல் முறையாக ஆர்யனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.  இந்த படத்தை தொடர்ந்து நடித்த 'நீர்ப்பறவை', 'முண்டாசுபட்டி',  'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றது.

கடந்த வருடம், இவர் நடித்த 'ராட்சசன்' திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதோடு வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது 'இடம் பொருள் ஏவல்', 'ஜகஜால கில்லாடி' மற்றும் மற்றொரு புது படத்திலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

கடந்த வருடம் தன்னுடைய காதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்த பின்,  சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்தாலும் குடும்பத்தினர் பற்றிய எந்த புகைப்படங்களையும் பதிவிடாமல்  பட சம்பந்தமான விஷயங்களை மட்டுமே பதிவிட்டு வந்தார்.

 

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின், முதல் முறையாக தன்னுடைய மகன் ஆரியன் மற்றும் செல்ல நாயுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.  சிறு குழந்தையாக பார்த்த விஷ்ணு விஷாலின் மகன் ஆர்யன் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?