கொரோனாவால் உயிரிழந்த நிதீஷ் வீரா மற்றும் அருண் ராஜாகாமராஜ் மனைவிக்கு விஷ்ணு விஷாலின் உருக்கமான இரங்கல்!

By manimegalai aFirst Published May 17, 2021, 6:46 PM IST
Highlights

கொரோனாவின் முதல் அலையில் அசால்டாக இருந்தவர்களை கூட ஆட்டம் காண வைத்துவிட்டது கொரோனாவின் இரண்டாவது அலை. சிறிய அளவிலான அறிகுறி தென்படும் போதே, உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் உயிரே போய் விடும் என்கிற நிலை உருவாகியுள்ளது. 

கொரோனாவின் முதல் அலையில் அசால்டாக இருந்தவர்களை கூட ஆட்டம் காண வைத்துவிட்டது கொரோனாவின் இரண்டாவது அலை. சிறிய அளவிலான அறிகுறி தென்படும் போதே, உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் உயிரே போய் விடும் என்கிற நிலை உருவாகியுள்ளது. எனவே பிரபலங்கள், தொழிலதிபர்கள், பாமர மக்கள் என அனைவருமே, அச்சத்தில் உறைந்துள்ளனர். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, மற்றும் சுகாதாரத்தோடு இருப்பது தான் இந்த தொற்றில் இருந்து நம்மை பாதுக்காக்கும்.

மேலும் மத்திய - மாநில அரசுகள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்த திட்டமிட்டுள்ள போதிலும், தடுப்பூசிகள் போதுமான அளவில் இல்லை. தடுப்பூசிகள் மற்றும் கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க, தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அடுத்தடுத்து பல பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், உள்ளிட்டோர் நிதி உதவியும் வழங்கி வருகிறார்கள்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பலர், மருத்துவர்களின் முறையான சிகிச்சையால் அதில் இருந்து மீண்டு வந்தாலும்... எதிர்பாராத விதமாக சில உயிரிழப்புகளும் நேர்கிறது. அந்த வகையில், கொரோனா தொற்றால் பாதிக்க பட்டு இன்று மட்டும், பிரபல இயக்குனர் அருண் ராஜாகாமராஜின் மனைவி சிந்துஜா மற்றும் புதுப்பேட்டை, அசுரன், காலா, உள்ளிட்ட பல படங்களில் நடித்த நிதீஷ் வீரா ஆகியோர் உயிரிழந்தனர்.

இவர்களுக்கு தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷால் ஹீரோவாக அறிமுகமான 'வெண்ணிலா கபடி' குழு படத்தில் நிதீஷ் வீரா நடித்திருந்தார். இதுகுறித்து, விஷ்ணு விஷால் போட்டுள்ள பதிவில், "நித்தீஷ் வீராவுடன், வெண்ணிலா கபாடி குழு, மற்றும் மாவீரன் கிட்டு ஆகியவற்றில் நடித்துள்ளேன். இந்த கோவிட் இரண்டாவது அலை பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. மிகவும் கவனமாக இருங்கள்,  உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் சிந்திவிற்கும் தன்னுடைய  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் "இந்த தாங்க முடியாத இழப்பை சமாளிக்க கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பலம் தரவேண்டும்" என என்றும் கூறியுள்ளார். இவர்கள் இருவரது இழப்பும் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பித்தக்கது. 

Sindhu...

Heartfelt condolences ..

May God give you and your family the strength to overcome this unbearable loss .

— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal)


It pains to write this...

Acted with him in and ..
This covid second wave is taking away so many lives..
Be careful and keep your loved ones really close to you...

— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal)

click me!