
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குவது, ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிப்பதற்கு, மருத்துவ உபகரணங்கள் வாங்குவது போன்றவற்றிற்கு சமூக ஆர்வலர்கள், பொது மக்கள், தொழிலதிபர்கள், திரை உலகினர் உட்பட பலரும் தொடர்ந்து வங்கி பரிவர்த்தனை மற்றும் நேரிலும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.
இன்றைய தினம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியில் தனது பங்களிப்பாக ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம், கொரோனாவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் - என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இவரை தொடர்ந்து, பிரபல நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் தமிழக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்காக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அனுப்பியுள்ளார். இதனை, அவரது செய்தி தொடர்பாளர் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் இவரது இந்த உதவிக்கு பலரும் தங்களுடைய நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.
இதுவரை நடிகர் சூர்யா ரூ.1 கோடி, அஜித் ரூ.25 லட்சம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரூ.1 கோடி, ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.25 லட்சம், இயக்குனர் ஷங்கர் ரூ.10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ .25 லட்சம், வெற்றிமாறன் ரூ.10 லட்சம் என தொடர்ந்து பிரபலங்கள் , அரசியல் வாதிகள் என பலர் நிதி உதவி அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.