கொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரபல நடிகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

Published : May 17, 2021, 11:49 AM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரபல நடிகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

சுருக்கம்

கொரோனாவின் தாக்கத்தை கட்டு படுத்த மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், தொடர்ந்து பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறனறனர். சராசரியாக ஒரு நாளைக்கு மட்டும் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமை படுத்தப்பட்டும், மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்...  

இன்று காலையிலேயே பிரபல இயக்குனர் அருண் ராஜாகாமராஜின் மனைவி சிந்துஜா மற்றும் நடிகர் நிதீஷ் வீரா ஆகியோர், அடுத்தடுத்து கொரோனவால் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பிரபலம் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவலை, அவரது நண்பர் அம்மா கிரேஷன்ஸ் சிவா த்விட்டேர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். 

பல வெற்றி படங்களை தயாரித்துள்ள, பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். இவர் பல படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அம்மா கிரியேஷன்ஸ் சிவா மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 36 வருட கால நண்பர், அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திவிர சிகிச்சையில் உள்ளார். அவர் மீண்டு வர அனைவரும் பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளோடு இருந்தாலும், அடுத்தடுத்து பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பேரதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை
யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்