மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு, மழை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் பணம் வழங்கியுள்ள தகவலை உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக, தமிழக பகுதிகளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் மற்ற மாவட்டங்களை விட சென்னை மக்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகினர். புயல் கரையை கடந்து பத்து நாட்கள் ஆகியும், இதுவரை பள்ளிக்கரணை, வேளச்சேரி, கூடுவாஞ்சேரி, உள்ளிட்ட பல பகுதிகளில்... வெள்ள நீர் குறையாமல் உள்ளது.
இதனால் பொதுமக்களும் தங்களுடைய இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப முடியாமல், வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தமிழக அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகு மூலம் தண்ணீர், அரிசி, பருப்பு, போன்ற அத்யாவசிய தேவைகளை வழங்கி வருகின்றனர். மேலும் இந்த பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்டு எடுக்கும் முயற்சியாக, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
undefined
அந்த வகையில் தொடர்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சாலைகளை சீர் செய்யும் பணியிலும் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையைச் சார்ந்த பலர் பெருமளவு இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, பிரபலங்கள் மற்றும் வசதி படைத்த பலர் தங்களால் முயன்ற அளவுக்கு தமிழக அரசின் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து வருகிறார்கள். ஏற்கனவே, நடிகர் சிவகார்த்திகேயன், கலாநிதி மாறன், உள்ளிட்டா பல நிதி வழங்கி உள்ள நிலையில்... தற்போது அமைச்சர் உதயநிதியை சந்தித்து நடிகர் விஷ்ணு விஷால் ரூ.10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து உதயநிதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்.. "புயல் - கன மழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிவாரணப் பணிகளை மேலும் வலுப்படுத்துகிற வகையில் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், அரசின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் - சகோதரர் விஷ்ணு விஷால், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும். என தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நடிகர் விஷ்ணு விஷால் காரப்பாக்கத்தில் வசித்து வந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக, அவருடைய வீடு மழை வெள்ளத்தில் மூழ்கியது. இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த அவரையும் அவரின் குடும்பத்தினரையும் படகு மூலம் தமிழக தீயணைப்புத் துறையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இவருடன் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானும் அவருடைய வீட்டில் இருந்து மீட்கப்பட்டார். பின்னர் நடிகர் அஜித் இவர்களுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.
மிக்ஜாம் புயல் - கன மழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிவாரணப் பணிகளை மேலும் வலுப்படுத்துகிற வகையில் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், அரசின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் - சகோதரர்… pic.twitter.com/Ph3JjPO316
— Udhay (@Udhaystalin)