ரஜினிகாந்த் பிறந்தநாளில் காலேஜ் சூப்பர்ஸ்டாராக மாறிய கவின் - கலர்ஃபுல்லான ஸ்டார் பர்ஸ்ட் சிங்கிள் வீடியோ இதோ

Published : Dec 12, 2023, 12:56 PM IST
ரஜினிகாந்த் பிறந்தநாளில் காலேஜ் சூப்பர்ஸ்டாராக மாறிய கவின் - கலர்ஃபுல்லான ஸ்டார் பர்ஸ்ட் சிங்கிள் வீடியோ இதோ

சுருக்கம்

இளன் இயக்கத்தில் கவின் நடித்து வரும் ஸ்டார் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று வெளியிட்டு உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் பிசியான கவின் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் கவினுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் அவர் அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் தான் ஸ்டார். இப்படத்தில் ஹரிஷ் கல்யான் தான் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தார். பின்னர் அவர் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக கவின் ஒப்பந்தமானார். இப்படத்தை இளன் இயக்கி வருகிறார். இவர் பியார் பிரேமா காதல் படத்தில் இயக்குனர் ஆவார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கவின் - இளன் கூட்டணியில் உருவாகும் ஸ்டார் படத்தில் அதிதி போஹன்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இதுதவிர நடிகர் லால் இப்படத்தில் கவினின் தந்தையாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்த நிலையில் ஸ்டார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது.

யுவன் பாடியுள்ள காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ் என்கிற பாடலை தான் வெளியிட்டுள்ளனர். இப்பாடலுக்கு கவின் அசத்தலாக டான்ஸ் ஆடியுள்ளதோடு மிகவும் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இப்பாடலுக்கு சதீஷ் தான் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இப்பாடலை வெளியிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... பிளாப் ஆன படத்தை கூட வலைவீசி தேடிருக்காங்க! 2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய படங்கள் லிஸ்ட் இதோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Ilaiyaraja Music: AI-யையே மிஞ்சும் வேகம்! 45 நிமிடங்களில் 9 பாடல்களை செதுக்கிய இளையராஜா!
Pranitha Subhash : நீச்சல் உடையில் மஜாவாக இருக்கும் நடிகை ப்ரணிதா! 2 குழந்தைக்கு அம்மா மாதிரி தெரிலயே!!