மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சில இடங்களில் கார்கள் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இப்படி புயல் பாதிப்பால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரண உதவிகளும் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு சார்பில் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர தன்னார்வலர்களும், திரையுலக பிரபலங்களும் இந்த வெள்ள நிவாரணத்துக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வழங்கி இருந்தார். அதேபோல் நடிகர்கள் கார்த்தியும், சூர்யாவும் இணைந்து ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதுதவிர விஜய் டிவி பிரபலங்களான அறந்தாங்கி நிஷா, குக் வித் கோமாளி பாலா ஆகியோர் களத்தில் இறங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிதி உதவியும், வெள்ள நிவாரண பொருட்களும் வழங்கினர். இந்த நிலையில், தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், தன் பங்கிற்கு வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.
ரஜினிகாந்த் பவுண்டேஷன் மற்றும் ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் அரிசி, கோதுமை, எண்ணெய், தலையணை, போர்வை ஆகிய வெள்ள நிவாரண பொருட்களுடன் 15 வாகனங்களில் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த் சத்தமின்றி செய்துள்ள இந்த பேருதவிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
"மிக்ஜாம் FLOOD
ReLiEF iTeMS "
By
[ R A J i N i K A N T H ] pic.twitter.com/NAIgFK2RYd
இதையும் படியுங்கள்... கவின் முதல் அமலா பால் வரை... 2023-ல் ஜம்முனு காதல் திருமணம் செய்துகொண்ட பிரபலங்களின் பட்டியல் இதோ