“ஆல்கஹால் பார்ட்டி வைத்தது உண்மை தான்”... குடிகாரன் என்ற குற்றச்சாட்டிற்கு விஷ்ணு விஷால் விளக்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 24, 2021, 6:36 PM IST
Highlights

தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மிகப்பெரிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் மீது அவருடைய அபார்ட்மெண்டை சேர்ந்தவர்கள் புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த புகாரில் விஷ்ணு விஷால் அடிக்கடி தன்னுடைய வீட்டில் பார்ட்டி நடத்துவதாகவும், குடித்துவிட்டு அதிகம் சத்தத்துடன் பாட்டு கேட்பதால் முதியவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. மேலும் தூக்கம் கெடுவதால் விஷ்ணு விஷாலிடம் சென்று கூறுபவர்களை அவர் தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

 

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை காவ்யாவின் அத்துமீறும் போட்டோ ஷூட்... ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் கொடுத்த அதிர்ச்சி!

நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்த விஷ்ணு விஷால் "தினமும் குடித்தால் 6 பேக் வராது. கடினமான டயட் இருக்க வேண்டும். ஆல்கஹால் போன்றவற்றை கண்டிப்பாக எடுக்க கூடாது. இதில் இருந்தே லாஜிக் புரிகிறதா? என கேட்டிருந்தார். தன்னை இந்த இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என்றே அந்த தொழிலதிபர் இது போன்ற புகாரை கொடுத்துள்ளதாகவும், தான் ஒரு சினிமாக்காரன் என்பதால் தன்னை சந்திக்க பலர் வருவது சகஜமான ஒன்று என்றும் தெரிவித்தார்.

தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மிகப்பெரிய விளக்கத்தை கொடுத்துள்ளார். தினமும் படப்பிடிப்பில் 300 பேர் உடன் பணியாற்றுவதால் பாதுகாப்பு கருதி வீட்டில் தங்காமல் தனியே வாடகை வீட்டில் தங்கியுள்ளேன். நான் தயாரித்து வரும் எஃப்ஐஆர் படத்திற்காகவும் பலரையும் சந்தித்து வருகிறேன். நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் நேற்று முதலே என் மீது குற்றச்சாட்டி வருகிறார். ஆனால் அவர் தான் என்னை சந்திக்க வந்த பணியாளர்கள், விருந்தினரிடம் தவறாக நடந்து கொண்டார்.

எனது கேமராமேன் பிறந்தநாளை வீட்டில் கொண்டாடினோம். அப்போது ஆல்கஹால் பார்ட்டி நடந்தது உண்மை. ஆனால் நான் சிக்ஸ் பேக் வைத்திருப்பதால் மது அருந்தவில்லை. ஆனால் எங்களுடைய தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டது. போலீசிடம் நான் அமைதியாகவே பேசினேன். ஆனால் வீட்டின் உரிமையாளர் தகாத முறையில் பேசினார். அதனால் கோபமடைந்து நானும் பேசினேன். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாருக்கு தெரியும். 

முன்னாள் போலீஸ் அதிகாரின் மகன் என்பதால் ஊடகங்கள், மக்களால் கடும் விமர்சனங்களை சந்திக்கிறேன். அதிகம் சத்தம் எழுப்புவதாகவும், வீட்டில் உடற்பயிற்சி செய்வது தொந்தரவாக இருப்பதாகவும் கூறியுள்ளார். நான் பேசிய வீடியோ மட்டுமே நேற்று வெளியானது. அவர் தவறாக பேசியதால் தான் நான் கோபப்பட்டு பேசினேன். எந்த மனிதனும் கெட்ட வார்த்தையை பொருத்துக்கொள்ள மாட்டான். குடிகாரன், கூத்தாடி என்று சித்திரிக்கப்படுவதையும்,நான் சார்ந்த சினிமா துறையை விமர்சிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

 

இதையும் படிங்க: நயன்தாராவையே பின்னுக்குத் தள்ளிய சமந்தா... தென்னிந்தியாவிலேயே நடிகைக்கு கிடைத்த முதல் பெருமை...!

வீட்டு உரிமையாளரின்  ஒனரின் நடத்தைகள் குறித்த ஆதாரத்தையும், தகவல்களையும் என்னால் பகிர முடியும். ஆனால் அவருக்கு என் அப்பாவின் வயது, எனவே அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்தவொரு அவப்பெயரையம் ஏற்படுத்த விரும்பவில்லை. அவரது மகனிடம் பேசி சில விஷயங்களை முடிவு செய்தோம். இந்த இடத்திலிருந்து செல்ல வேண்டும் என்று எப்போதோ நான் முடிவெடுத்து விட்டேன். என் படத்தின் வேலைகள் முடிவதற்காகத தான் இத்தனை நாள் காத்திருந்தேன். இது என்னுடைய பலவீனம் அல்ல. தேவையற்ற சட்ட போராட்டத்தில் நான் ஈடுபட விரும்பவில்லை. என் ரசிகர்களுக்காகவும், நலம் விரும்பிகளுக்காகவும் நான் செய்யவேண்டியவை ஏராளம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

click me!