வில்லங்க விஷாலின் வருங்காலம் இவர் தான்!! உட்பி யுடன் ஒய்யார ஃபோஸ்...

Published : Jan 15, 2019, 08:49 PM ISTUpdated : Jan 15, 2019, 08:52 PM IST
வில்லங்க விஷாலின் வருங்காலம் இவர் தான்!! உட்பி யுடன் ஒய்யார ஃபோஸ்...

சுருக்கம்

ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை நடிகர் விஷாலுக்கு முடிவு செய்துள்ளனர். விரைவில் ஹைதராபாத்தில் விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே திருமண தேதியையும் முடிவு செய்யவுள்ளனர்.

'சண்டக்கோழி', 'தாமிரபரணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நாயகனாகவும் வலம்வரத் தொடங்கிய நடிகர்  விஷால், தயாரிப்பாளராகவும் 'பாண்டியநாடு', 'ஆம்பள', 'துப்பறிவாளன்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

திருமணம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போது, நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் முடிந்து, அதில் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்து வந்தார் விஷால். நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும் எனத் தெரிகிறது.

இதனால், விஷாலுக்குப் பெண் பார்க்கும் பணிகளில் அவரது பெற்றோர் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை விஷாலுக்குத் திருமணம் செய்து வைக்க  முடிவு செய்துள்ளனர்.  

விரைவில் ஹைதராபாத்தில் விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அன்றைய தினமே திருமணத் தேதியையும் முடிவு செய்யவுள்ளனர். இந்நிலையில் தனக்கு கல்யாணத்திற்கு முடிவு செய்யப்பட்ட ஆந்திரப் பெண் அனிஷாவுடன் ஓய்யார ஃபோஸ் கொடுத்து போட்டோ எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!