அடம்பிடித்து அஜித்தோடு மோதிய ரஜினிக்கு நஷ்டம் 6 கோடியே 21 லட்சம்! தெறிக்கவிடும் தல படத்தின் தியேட்டர் கணக்கு வழக்கு!

Published : Jan 15, 2019, 05:04 PM IST
அடம்பிடித்து அஜித்தோடு மோதிய ரஜினிக்கு நஷ்டம் 6 கோடியே 21 லட்சம்! தெறிக்கவிடும் தல படத்தின் தியேட்டர் கணக்கு வழக்கு!

சுருக்கம்

தல அஜித்தோடு அடம்பிடித்து மோதிய ரஜினியின் பேட்ட படத்திற்கு  நஷ்டம் ஆறுகோடியே இருபத்தியோரு லட்சம் என அல்லு தெறிக்கவிடும் தல படத்தின் தியேட்டர் கணக்கு வழக்கு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.  

படம் ரிலீஸ் ஆகி நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்னமும் சூடு குறையவே இல்லை! என்கிறார்கள் விஸ்வாசம் படத்துக்கான மக்கள் வரவேற்பை. பேட்ட-யும் தரை இறங்கி செம்ம தாக்குதல் தான் நடத்தி இருக்கிறது. ஆனாலும் அஜித்தை விட ரஜினி பின் தங்கி இருப்பது தெள்ளத்தெளிவு! என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். 

ஆனால் அதேவேளையில் ‘விஸ்வாசம் வசூல் பேட்ட வசூலை விட அதிகம்! என்று பொய்யாக கிளப்புகிறார்கள்.’ என்று ஒரு தரப்பு கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில், இரு படங்களின் முதல் நாள் தமிழக தியேட்டர் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் இரு படங்களுமும் ரிலீஸான முதல் நாள் வசூல் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதன்படி பேட்ட படம் பத்து கோடியே நாற்பது லட்சமும், விஸ்வாசம் படம் பதினாறு கோடியே அறுபத்தியோரு லட்சமும் வசூல் செய்துள்ளதாம். இந்த வித்தியாச தொகை ரஜினியின் கவனத்துக்குப் போக மனிதர் சற்று நொந்துவிட்டாராம்.

இந்நிலையில், அடுத்த தலைமுறை நடிகர் அஜித்குமாரிடம் ரஜினிகாந்த் போட்டியிட்டு தோற்றுவிட்டதாக வெளிவரும் தகவல்கள்  சூப்பர் வட்டாரத்தை ஏகத்துக்கும் கோபப்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்த வசூல் பின் தங்கலானது தயாரிப்பு வட்டாரத்தையும் எரிச்சலாக்கியதாம். 

அதாவது ‘சார்தான் (ரஜினி) இந்த மோதலுக்கு விருப்பப்பட்டார். இல்லேன்னா சில வாரங்கள் கழிச்சுதானே வெளியாகுற பிளான் நமக்கு இருந்துச்சு?” என்று சுருக்கென்று கூறிவிட்டாரம் தயாரிப்பு தரப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர். இதுவும் ரஜினியின் கவனத்துக்கு போய், கடுப்பேற்றி இருக்கிறது. 

இந்நிலையில், ’அஜித்தோடு அடம் பிடித்து மோதிய ரஜினிகாந்துக்கு ஆறு கோடியே நாற்பத்து ஓரு லட்சம் ரூபாய் நஷ்டம்!’ என்று செமத்தியாக நக்கலடித்திருக்கிறது ரஜினிக்கு ஆகாத தரப்பு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?