
அடுத்த மாதம் ஏப்ரல் 2ஆம் தேதி தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஐந்து அணியினர் போட்டியிட உள்ளனர். அதற்காக தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த பிரச்சாரத்தின் போது கலைப்புலி தாணு , விஷால் உடல் முழுவதும் விஷம் இருப்பதாக கூறினார். இந்த கருத்துக்கு தற்போது ஒரு பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் விஷாலுக்கு உடம்பு முழுவதும் விஷம் இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். ஆம் அது உண்மைதான். சிவபெருமானுக்கு தொண்டையில் விஷம் இருந்தது போல விஷாலுக்கும் கொஞ்சம் இருக்கலாம்.
ஆனால் அவர் நல்லது மட்டுமே செய்யும் நபர் என்றார் . நடிகர் சங்க தேர்தலின்போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும் நானும் பத்து படங்கள் வரை இயக்கியுள்ளேன். அதில் எனக்கு பிடித்த இரண்டு படங்கள் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' மற்றும் 'நந்தலாலா' ஆகிய படங்கள்.
ஆனால் இந்த இரண்டு படங்களையும் வெளியிட நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. தயாரிப்பாளர் சங்கம் எனக்கு கொஞ்சம் கூட உதவி செய்யவில்லை என்று கூறினார். நான் பட்ட கஷ்டம் இனிமேல் எந்த தயாரிப்பாளருக்கும் ஏற்பட கூடாது என்பதற்காகவே விஷால் அணியில் நான் இருக்கின்றேன்.
தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் கண்டிப்பாக ஒரு வருடத்திற்குள் தீர்த்து வைப்போம். அவ்வாறு செய்யவில்லை என்றால் எங்களை கழுத்தை பிடித்து நீங்கள் தாராளமாக வெளியே தள்ளலாம்.
தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் வேள்வியில் இறங்கியுள்ளோம். இந்த வேள்வியில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என மிஷ்கின் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.