பழம்பெரும் நடிகை வீட்டில் குடியேறிய ஓ.பி.எஸ்...

 
Published : Mar 09, 2017, 01:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
பழம்பெரும் நடிகை வீட்டில் குடியேறிய ஓ.பி.எஸ்...

சுருக்கம்

ops take rent house for actress home

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் பன்னீர் செல்வம் சென்னை  கிரீன்வேஸ் சாலையில் அமைத்துள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார். 

இந்நிலையில் தன்னுடைய முதலமைச்சர் பதவியை கடந்த 5ஆம் தேதி ராஜினாமா செய்தார், இதனால் இதற்கு மேல் அவர் அந்த வீட்டில் வசிக்க முடியாது என கூறி பொதுப்பணித்துறை சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனால் தற்போது அரசு பங்களாவை காலி செய்து விட்டு , மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பின்புறம் பகுதியில் அமைத்துள்ள வீனஸ் காலனி முதல் தெருவில் அமைந்துள்ள , பழம் பெரும் நடிகை பத்மினியின் சகோதரி ராகினியின்  வீட்டில் குடியேறியுள்ளார்.

ஓ.பி.எஸ் தற்போது குடியேறியுள்ள  வீட்டின் ,இரண்டாவது மாடியில் நடிகை ராகினியின் மகள் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?