விஷாலுக்கு இப்படி ஒரு வெளிநாட்டு ரசிகையா..? மெய்சிலிர்க்க வைத்த செயல்..!

By manimegalai aFirst Published Aug 29, 2018, 7:57 PM IST
Highlights

இரும்பு திரை படத்தின் 100 வது நாள் வெற்றி விழா இன்று பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஷால்.

இரும்பு திரை படத்தின் 100 வது நாள் வெற்றி விழா இன்று பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஷால்.

சில படங்கள் வெற்றியடைந்தாலும் சில படங்கள் தான் திருப்புமுனையாக அமையும், அப்படிதான் இரும்புதிரையும். இப்படத்தின் கதையைக் கேட்கும்போதே முடிவு செய்து விட்டேன், கண்டிப்பாக என் சினிமா வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும் என்று. யுவன் என்னுடன் பிறந்த சகோதரன் மாதிரி.

நான் முதலில் அர்ஜுனிடம் தன் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். என்னுடைய முதல் சம்பளம் 1௦௦ ரூபாய். சிறிது சிறிதாக சேர்த்து என் அம்மாவிற்கு ஒரு புடவையும், அப்பாவுக்கு shaving kit –ம் வாங்கிக் கொடுத்தேன். இப்படம் மாபெரும் வெற்றியடைந்ததற்கு முக்கியக் காரணம் அர்ஜுன் தான்.

சினிமாத் துறையில் கதாநாயகிக்கு திருமணமாகிவிட்டால் அதோடு, நடிக்க வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் அக்கா கதாபாத்திரம், அம்மா கதாபாத்திரத்தில் தான் நடிப்பார்கள் என்ற நம்பிக்கையை உடைத்து, கதாநாயகியாக நடித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் சமந்தா.

இறுதியாக, இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. ஆனால் விஷாலுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. ஏனென்றால், கனடா நாட்டிலிருந்து வந்த அக்ஷயா என்ற பெண்ணிடம்தான் கேடயத்தைப் பெற வேண்டும் என்று விரும்பினார். அப்பெண் பிறந்தது முதல் கண் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷாலுடைய 24 படங்களையும் காதால் கேட்டே வளர்ந்துள்ளார். இவர் படத்தின் எந்த வசனத்தைக் கூறினாலும் அது எந்த படம் என்று சரியாகச் சொல்லிவிடுவார். ஆகையால் அவர் கையால் கேடயம் பெறுவதே தனக்கு மிகச் சிறந்த பரிசாகக் கருதுவதாகக் கூறினார். அந்தப் பெண் நேற்றே விஷாலின் இல்லத்திற்கு வந்து விஷாலிடம் கேடயத்தை வழங்கினார்.
 

click me!