“மன்சூர் அலிகான் வேண்டுமென்றே அப்படி பண்ணாரு..” பிரபல மலையாள நடிகர் குற்றச்சாட்டு.. வைரல் வீடியோ..

Published : Nov 22, 2023, 12:56 PM ISTUpdated : Nov 22, 2023, 12:57 PM IST
“மன்சூர் அலிகான் வேண்டுமென்றே அப்படி பண்ணாரு..” பிரபல மலையாள நடிகர் குற்றச்சாட்டு.. வைரல் வீடியோ..

சுருக்கம்

த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய சர்ச்சைக்கு மத்தியில், நடிகர் மன்சூர் அலிகான் பற்றி பிரபல மலையாள நடிகர் ஹரிஸ்ரீ அசோகன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை த்ரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறிய ஆபாச கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மன்சூர் அலிகான் தன்னை பற்றி பேசிய வீடியோ வைரலான நிலையில் நடிகை த்ரிஷா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். மேலும் மன்சூர் அலிகானுக்கு திரைப் பிரபலங்கள் மட்டுமின்றி பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வந்தனர். 

மேலும் தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகானுக்க்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த ஆணையத்தின் உறுப்பினரான குஷ்பு தெரிவித்திருந்தார். மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மகளிர் ஆணையம் டிஜிபிக்கு அறிவுறுத்தியதை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது. ஆனால் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் தான் த்ரிஷா பற்றி தவறாக பேசவில்லை எனவும், மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறிவிட்டார்.

இந்த நிலையில் மலையாள நடிகர் ஹரிஸ்ரீ அசோகன் சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகானை விமர்சித்து கொடுத்த பழைய வீடியோதான் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 2000 ஆம் ஆண்டு குஞ்சாக்கோ போபன் நடித்த சத்தியம் சிவம் சுந்தரம் திரைப்படத்தில் மன்சூர் அலி கான் வில்லனாக நடித்ததில் அவருடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அந்த படத்தில் தனக்கும், மறைந்த நடிகர் கொச்சின் ஹனீபா மற்றும் மன்சூர் அலிகான் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சி பற்றி பேசினார். அப்போது “ பஸ் ஸ்டாண்டில் எங்களை அடிப்பது போல் மன்சூர் நடந்து கொள்ள வேண்டும். இருப்பினும், அவர் வேண்டுமென்றே என் கையில் இரண்டு முறை குத்தினார், என் மார்பிலும் உதைத்தார். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னாலும், அவர் கேட்கவில்லை, திரும்பத் திரும்ப நிஜமாகவே அடித்துக் கொண்டிருந்தார்.

 

கடைசியாக நான் அவரை எச்சரிக்க வேண்டியிருந்தது. இறுதியாக, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, “இன்னொரு முறை என் மீது கை வைத்தால், மீண்டும் மெட்ராஸைப் பார்க்க மாட்டாய்” என்று மிரட்டினேன். அதன்பின்னரே அவர் ஒழுங்காக நடித்தார். மன்சூர் அலிகான் மீது 100-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன” என்று தெரிவித்தார்.  இந்த வீடியோவை பார்த்த பலரும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மன்சூர் அலிகானின் குணம் மாறவில்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.

Mansoor Ali Khan: த்ரிஷா குறித்த பேச்சு... நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Rajinikanth Net Worth : எளிமையின் சிகரம் ரஜினிகாந்த்... யம்மாடியோ இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?
50 ஆண்டு சாதனை.. பல தலைமுறைகளை கவர்ந்தவர்.. ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து