எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் 'விஸ்காம்' எனப்படும் காட்சித் தொடர்பியல் துறையின் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலகில் தன் தனித்துவமான படங்களைத் தன் பாணியில் இயக்கி, தனக்கென முத்திரை பதித்து சாதனை படைத்த புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் 'திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர்' விருதினை வழங்கினார்.
விருது வழங்கும் முன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் திரையுலகச் சாதனைகளை குறிப்பிடப்பட்டு விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அருண்குமாரும் உடன் இருந்தார். இவ்விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகரும் கலந்து கொண்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கி உள்ள நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சினிமாவில் இயக்குனராக கலக்கிய எஸ்.ஏ.சி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் என்கிற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பிரபல சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் விஜய் டிவி..! நடிகையின் கண்ணீர் பதிவால் ஷாக் ஆன ரசிகர்கள்