தசாவதாரம் கமலுக்கே டஃப் கொடுக்கும் சியான்... விக்ரமின் மாஸான கெட்-அப்களுடன் வெளிவந்த ‘கோப்ரா’ பட பாடல்

By Asianet Tamil cinema  |  First Published Apr 22, 2022, 12:47 PM IST

Adheeraa song : கோப்ரா படத்தில் இடம்பெறும் அதீரா என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமானின் துள்ளல் இசையில் ரசிகர்களை கவரும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது. 


டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, தற்போது இயக்கியுள்ள படம் கோப்ரா. சியான் விக்ரம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர் கே.ஜி.எஃப் படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடித்தவர் ஆவர். தமிழில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

Tap to resize

Latest Videos

7 ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்துள்ளார். இப்படம் மூலம் அவர் நடிகராக அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்துள்ளார் விக்ரம். கோப்ரா படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் ஏற்கனவே வெளியான தும்பி துள்ளல் பாடல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. இப்பாடல் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகும் நிலையில், 2-வது பாடல் குறித்த அப்டேட்டை நடிகர் விக்ரமின் பிறந்தநாளன்று வெளியிட்டனர்.

அதன்படி கோப்ரா படத்தில் இடம்பெறும் அதீரா என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமானின் துள்ளல் இசையில் ரசிகர்களை கவரும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது. இதன் லிரிக்கல் வீடியோவில் நடிகர் விக்ரமின் பல்வேறு கெட்-அப்களும் இடம்பெற்று உள்ளன. இதைப்பார்த்த ரசிகர்கள் தசாவதாரம் கமலையே மிஞ்சும் அளவுக்கு விக்ரமின் ஒவ்வொரு தோற்றங்களும் அமைந்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... தோனியின் வின்னிங் ஷாட் பார்த்து மெர்சலான பிரபல நடிகர்... உற்சாகத்தில் குழந்தை போல் துள்ளிக்குதிக்கும் வீடியோ

click me!