Tamannah Work Out Video: டயட் பக்கம் திரும்பிய நடிகை தமன்னா...ஜிம்மில் வெறித்தனமான ஒர்கவுட் வீடியோ....

Anija Kannan   | Asianet News
Published : Apr 22, 2022, 09:50 AM IST
Tamannah Work Out Video: டயட் பக்கம் திரும்பிய நடிகை தமன்னா...ஜிம்மில் வெறித்தனமான ஒர்கவுட் வீடியோ....

சுருக்கம்

Tamannah Work Out Video: நடிகை தமன்னா வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள்  தற்போது வைரலாக்கி வருகின்றனர். 

நடிகை தமன்னா வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள்  தற்போது வைரலாக்கி வருகின்றனர். 

நடிகை தமன்னா ஆரம்ப கால பயணம்:

தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும்  நடிகை தமன்னா, ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் கொண்டவர். கடந்த 2006 ஆம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவருக்கும், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி தமிழில் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி:

இவர், தமிழில் அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, என  முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர், தமிழ் சினிமா மட்டுமின்றி தன்னுடைய 16 ஆண்டு கால சினிமா பயணத்தில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும், தமன்னா பாலிவுட் திரை உலகிலும் ஒரு சில படங்கள் நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.

பாகுபலி திரைப்படத்தில் நடிகை தமன்னா:
 
இவரது கேரியரில் திருப்பு முனையாக இருந்தது, பாகுபலி திரைப்படம். முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் மாஸ் நாயகியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்திழுத்தார் தமன்னா.  இதில், நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் உலகளவில் பிரபலமானவர்.

பாகுபலி வெற்றியை தொடர்ந்து   நடிகை தமன்னா, தேவி 1, தேவி 2 உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.இவருடைய கைவசம் தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு துறையில் Bhola Shankar, F3, Gurthunda Seethakalam உள்ளிட்ட 6 முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உள்ளன.

தமன்னாவின் வெறித்தனமாக ஒர்க் அவுட் வீடியோ:

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். இவருக்கும், இன்ஸ்டாகிராமில் 16 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். 

மேலும் படிக்க....Ilaiyaraaja : நான் உன்னை நீங்க மாட்டேன்... மீண்டும் சர்ச்சையை கிளப்பிய இளையராஜா

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சூர்யா 47 படத்துக்கு இம்புட்டு டிமாண்டா? அடேங்கப்பா... ஷூட்டிங் தொடங்கும் முன்பே இத்தனை கோடி வசூலா?
காளியம்மாள் ஐடியா; கார்த்திக்கை ஜெயிலுக்கு அனுப்ப உயிரை பணையம் வைத்த சந்திரகலா: கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!