அக்ஷிதா திருமணத்தில் விக்ரம் மனைவி... மகன் ஏன் கலந்து கொள்ளவில்லை?

 
Published : Nov 08, 2017, 01:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
அக்ஷிதா திருமணத்தில் விக்ரம் மனைவி... மகன் ஏன் கலந்து கொள்ளவில்லை?

சுருக்கம்

vikram daugther marriage issue

நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவின் திருமணம் கடந்த மாதம் 30 ஆம் தேதி நடந்தது. அக்ஷிதா தன்னுடைய காதலனும், கருணாநிதியின் பேரனுமான மனு ரஞ்சித்தை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்தத் திருமண விழாவில், கருணாநிதியின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர். ஆனால் விக்ரமின் மனைவி மற்றும் மகன் ஆகியோரை மட்டும் அந்த நிகழ்ச்சியில் காணவில்லை என்று கூறப்படுகிறது.

விக்ரம் தன்னுடைய ஒரே மகள் அக்ஷிதாவின் ஆசைப்படி திருமணம் செய்து வைத்திருந்தாலும், இந்தத் திருமணத்தில் விக்ரமின் மனைவி மற்றும் மகனுக்கு துளியும் விருப்பம்  இல்லாததால்தான் இவர்கள் இந்த திருமண வைபவத்தில் கலந்து கொள்ள வில்லை என கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் பிரபலங்களில் கூட விஜய் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விக்ரமின் மனைவி மற்றும் மகன் கலந்து கொள்ளாதது குறித்து தற்போது பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால். விரைவில் இது குறித்து விக்ரமே அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி