மாஸ்க் அணிந்து பிரயாக்ராஜ் வந்த கோப்ரா நடிகை – கும்பமேளாவில் புனித நீராடிய ஸ்ரீநிதி ஷெட்டி!

Published : Feb 04, 2025, 11:44 PM IST
மாஸ்க் அணிந்து பிரயாக்ராஜ் வந்த கோப்ரா நடிகை – கும்பமேளாவில் புனித நீராடிய ஸ்ரீநிதி ஷெட்டி!

சுருக்கம்

Srinidhi Shetty Holy dip At Prayagraj MahaKumbh Mela 2025 : கேஜிஎஃப் புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் புனித நீராடினார். மௌனி அமாவாசை அன்று திரிவேணி சங்கமத்தில் நீராடி, இந்த அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Srinidhi Shetty Holy dip At Prayagraj MahaKumbh Mela 2025 : உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில், திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். வரும் 26ஆம் தேதி கும்பமேளா நிகழ்வு முடியும் நிலையில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் என்று பலரும் புனித நீராடி வருகின்றனர். ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகா கும்ப மேளாவில் புனித நீராடினார். இன்று பூடான் நாட்டு மன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இணைந்து புனித நீராடினார்.

மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தரும் பிரதமர் மோடி!

நாளை பிப்ரவரி 5ஆம் தேதி பிரயாக்ராஜ் வரும் பிரதமர் நரேந்திர மோடி கும்பமேளாவில் புனித நீராட இருக்கிறார். இந்த நிலையில் தான் கேஜிஎஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மகா கும்பமேளா நகரின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளர். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். '

மௌனி அமாவாசை அன்று மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் நான் புனித நீராடுவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. இந்த அற்புதமான அனுபவத்தை நான் முழுமையாக அனுபவித்தேன்' என்று எழுதியுள்ளார். மௌனி அமாவாசை அன்று கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். ஆனால், ஸ்ரீநிதி ஷெட்டி அதிகாலை வேளையில் புனித நீராடலில் கலந்து கொண்டார்.

மகா கும்பத்தில் மூழ்கிய இந்தியா; உலகம் முழுவதிலும் இருந்து வந்த பக்தர்கள்!

வாழ்க்கை ஆச்சரியங்களின் சந்தை. இந்த தெய்வீக அருள் மற்றும் ஆசீர்வாதத்தால் என் இதயம் நிறைந்துள்ளது என்று அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார். சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் ராஜ் பி. ஷெட்டி, சார்லி பட இயக்குனர் கே. கிரண் ராஜ், தொகுப்பாளினி அனுஷ்ரீ ஆகியோரும் மகா கும்பமேளாவில் புனித நீராடினர்.

 

பிரயாக்ராஜ் கும்பமேளாவிற்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை 35 கோடி பேர் பிரயாக்ராஜுக்கு வருகை தந்துள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. ஸ்ரீநிதி ஷெட்டி பிரயாக்ராஜில் நாள் முழுவதும் முகக்கவசம் அணிந்தே பயணம் செய்து, அப்பகுதியின் ஆன்மீக அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

கேஜிஎஃப்-1 மற்றும் கேஜிஎஃப்-2 படங்களில் நடிகர் யாஷூக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி இந்தப் படங்களுக்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஸியாக உள்ளார். தற்போது நேச்சுரல் ஸ்டார் நானியின் ஹிட்-3 படத்திலும், பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா வெட்டிங் டாக்குமெண்டரி ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா?
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?