
கே.பி.சௌத்ரி தற்கொலை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தை தெலுங்கில் வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி. இவர் கோவாவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கடன் பிரச்சனையில் சிக்கி இருந்த கே.பி. சவுத்ரி, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டிருந்தாராம். கோவாவில் தங்கியிருந்த கேபி செளத்ரி நேற்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த கே.பி.செளத்ரி?
ரஜினிகாந்தின் 'கபாலி' படத்தை தெலுங்கில் வெளியிட்டதன் மூலம் பிரபலமான செளத்ரி, அதன் பிறகு, சர்தார் கப்பர் சிங், சீதம்மா வக்கிட்லோ, சிரிமல்லே சேட்டு போன்ற படங்களை விநியோகம் செய்தார். இதுதவிர சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். ரியல் எஸ்டேட்டில் நிறைய இழப்புகளைச் சந்தித்த அவர் பின்னர் கோவாவுக்கு சென்று அங்கு பப் ஒன்றை நடத்தி வந்தார். ஆனால் அந்த தொழிலும் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. சட்டவிரோதமாக கட்டியதாக கூறி கோவா அரசு அவருக்கு சொந்தமான பப்பை இடித்தது.
இதையும் படியுங்கள்... தாலியை கழட்டிய கீர்த்தி சுரேஷ்; போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!
போதைப்பொருள் வழக்கில் கைது
மேலும் கோவாவுக்கு வரும் திரைப் பிரபலங்களுக்கு அவர் ரகசியமாக போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. திரைப்படங்கள் மற்றும் பப்பினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அவர் போதைப்பொருள் தொழிலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் போதைப்பொருள் சப்ளை செய்த குற்றத்திற்காக கே.பி. சவுத்ரி கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அவரது வாழ்க்கை நரகமானது. அவர்மீதான போதைப்பொருள் வழக்கு இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தற்கொலைக்கு காரணம் என்ன?
போதைப் பொருள் வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த கே.பி. செளத்ரி கோவாவில் வசித்து வந்தார். மேலும் அவர் கடுமையான நிதி சிக்கல்களை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்த அவர் திடீரென தற்கொலை செய்துள்ளார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தான் செளத்ரியின் தற்கொலை முடிவுக்கு காரணமா? என்கிற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... STR 51 படத்துக்காக கடவுளாக மாறும் சிம்பு! God Of Love படத்தின் கதை இதுதானா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.