vikram61 : சந்தோஷ் நாராயணன் உடன் மோதல்- ‘விக்ரம் 61’ படத்தின் மியூசிக்கிற்காக மாஸ்டர் பிளான் போட்ட பா.இரஞ்சித்

Ganesh A   | Asianet News
Published : Dec 03, 2021, 03:41 PM IST
vikram61 : சந்தோஷ் நாராயணன் உடன் மோதல்- ‘விக்ரம் 61’ படத்தின் மியூசிக்கிற்காக மாஸ்டர் பிளான் போட்ட பா.இரஞ்சித்

சுருக்கம்

கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் விக்ரம், தற்போது பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். தற்போது இவர் கைவசம் கோப்ரா, துருவ நட்சத்திரம், மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் உள்ளன. இதில் கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தை கவுதம் மேனன் இயக்கி உள்ளார். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

அடுத்ததாக விக்ரம் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுதவிர மகான் படத்திலும் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரமுடன் அவரது மகன் துருவ்வும் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் விக்ரம், தற்போது பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். வழக்கமாக பா.இரஞ்சித் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைப்பார். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விக்ரம் நடிக்கும் படத்துக்கு அனிருத்தை இசையமைக்க வைக்க பா.இரஞ்சித் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தென்னிந்தியாவின் 'ராஜமாதா'; 40 ஆண்டுகால உழைப்பு; 200 கோடி சொத்து: ரம்யா கிருஷ்ணனின் அசுர வளர்ச்சி!
லாக்கப்பில் கார்த்திக்: துடி துடித்துப் போன ரேவதி: அதிரடி திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!