கொம்பு வைத்த காளை போல் புல்லட்டில் சீறி வரும் விக்ரம்..! வெறித்தனமாக வெளியான 'மஹான்' ஃபர்ஸ்ட் லுக்!

Published : Aug 21, 2021, 12:18 PM IST
கொம்பு வைத்த காளை போல் புல்லட்டில் சீறி வரும் விக்ரம்..! வெறித்தனமாக வெளியான 'மஹான்' ஃபர்ஸ்ட் லுக்!

சுருக்கம்

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இருவரும் இணைத்து நடித்துள்ள, 60 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் 'மஹான்' என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இருவரும் இணைத்து நடித்துள்ள, 60 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் 'மஹான்' என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முதல் முறையாக நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ், இருவரும் இணைந்து 'விக்ரம் 60 ' படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை, இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் மத்திய - மாநில அரசுகள், படப்பிடிப்புக்கு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி கொடுத்துள்ளதால், மீண்டும் துவங்கியது.

அதன்படி,  'விக்ரம் 60 ' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் டார்ஜிலிங்கில் நடந்து முடிந்தது. பொன்னியின் செல்வன், மற்றும் கோப்ரா ஆகிய படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்த போதிலும், இந்த படத்தில் நடித்து முடித்தார் விக்ரம். இந்நிலையில் இந்த படத்தின் வெறித்தனமான ஃபஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் 'மஹான்' என்பதையும் படக்குழு அறிவித்துள்ளனர்.

இதில் விக்ரமை சுற்றி 16 கைகள் இருக்கு, அவர் கொம்பு முளைத்த காளையாக புல்லட் ஓட்டி வருவது போல் உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் விக்ரம் கேங் ஸ்டாராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து, இதனை உறுதி படுத்து விதமாக இந்த போஸ்டர் அமைத்துள்ளது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் துருவுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடித்து வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார் என கூறப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தை, மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம். கூடிய விரைவில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி
நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!