மாரடைப்பால் பிரபல நடிகை திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

manimegalai a   | Asianet News
Published : Aug 21, 2021, 09:55 AM IST
மாரடைப்பால் பிரபல நடிகை திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

சுருக்கம்

சித்ராவுக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு  ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் ’அவள் அப்படித்தான்’ படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் சித்ரா. கே.பாலசந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. தமிழில் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சித்ரா,  குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சென்னை சாலிகிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். சித்ராவுக்கு ஸ்ருதி என்ற மகள் உள்ளார். அவர் இந்தாண்டு 12ம் வகுப்பை முடித்துள்ளார். சித்ரா கடைசியாக 2020ம் ஆண்டு வெளியான   "என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா" என்ற படத்தில் நடித்திருந்தார்.

சித்ராவுக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு  ஏற்பட்டுள்ளது. வீட்டிலே அவரது உயிர் பிரிந்ததாக  கூறப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய்யின் வளர்ச்சியை 28 வருடங்களுக்கு முன்பே கணித்து ஆரூடம் சொன்னவர்... யார் இந்த மோகன்ராஜ்?
கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது