
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். காக்கா முட்டை, க/பெ ரணசிங்கம், கனா பட வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘திட்டம் இரண்டு’ படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த படத்தில் முதன் முறையாக ஐஸ்வர்யா ராஜேஷ் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘பூமிகா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். திகில் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். ‘பூமிகா’ ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த படம் நேரடியாக விஜய் டிவியில் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி படம் வெளியாகிறது. பட வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருப்பதால், 23-ஆம் தேதி அன்றே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ’பூமிகா’ வெளியாகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 23ம் தேதி 12 மணிக்கு படம் நெட் பிலிக்ஸ் இணையதளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.