
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என பல கேரக்டரில் அசத்தி வருகிறார். துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர் என விஜய் சேதுபதி நடிப்பில் படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராக உள்ளன. தற்போது உலக நாயகன் கமல் ஹாசனுடன் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
திரைப்படங்களை தொடர்ந்து தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி ஒன்றையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என கலக்கிய விஜய்சேதுபதி, தற்போது மற்றொரு புது தளத்தில் அடியெடுத்து வைக்கிறார். திரையரங்குகளில் வெளியாகும் சினிமாக்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப்போல நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகும் படங்களுக்கும் சீரிஸ்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு விஜய் சேதுபதி புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்ற ஃபேமிலி மேன் வெப்சீரிஸின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே உடன் விஜய் சேதுபதி கரம் கோர்த்துள்ளார். இவர்களுடைய ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா நடித்த கதாபாத்திரம் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், தற்போது புதிய வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அந்த வெப் சீரிஸின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதுகுறித்து இந்த வெப் சீரிஸில் நடித்து வரும் நடிகையான ராஷி கண்ணா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மூன்றாவது முறையாக எனக்கு பிடித்த மனிதரும், நடிகருமான விஜய்சேதுபதியோடு இணைந்து பணியாற்ற உள்ளேன். இந்த முறை இந்தியில்...! உங்களை படப்பிடிப்பு தளத்திற்கு வரவேற்கிறேன் விஜய்சேதுபதி சார் என பதிவிட்டுள்ளார். அத்துடன் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.