'சார்பட்டா' படத்தில் வித்தியாசமாக தோன்றி கவனிக்க வைத்த மாறன்..! வெற்றியை கொண்டா இல்லாமல் போன சோகம்..!

By manimegalai aFirst Published Aug 1, 2021, 7:39 PM IST
Highlights

'சார்பட்டா' பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆரின் தொண்டராக மாஞ்சா கண்ணன்... என்ற கதாபாத்திரத்தில் தோன்றி கவனத்தை ஈர்த்துள்ள மாறன், இந்த படத்தின் ரிலீசுக்கு முன்பேர கொரோனா தொற்றால் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இதன் காரணமாக இந்த படத்தின்  வெற்றியை அனுபவிக்காமலேயே போய்விட்டது.
 

'சார்பட்டா' பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆரின் தொண்டராக மாஞ்சா கண்ணன்... என்ற கதாபாத்திரத்தில் தோன்றி கவனத்தை ஈர்த்துள்ள மாறன், இந்த படத்தின் ரிலீசுக்கு முன்பேர கொரோனா தொற்றால் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இதன் காரணமாக இந்த படத்தின்  வெற்றியை அனுபவிக்காமலேயே போய்விட்டது.

தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களாக, காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த, நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. சாதாரண காச்சல் என கவனிக்காமல் போனதால், கொரோனா தொற்று முற்றி இவரது உயிரை பறித்தது. ஒரு வேலை இவர் இன்று உயிரோடு இருந்திருந்தால்... 'சார்பட்டா' பட வெற்றியை, படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்திருப்பார். 

சமீப காலமாக... தமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் போன்ற சில பாத்திரங்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறும் என்ற பழைய விதிகளை எல்லாம் உடைத்து, சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சின்னஞ் சின்ன கதாபாத்திரங்கள் கூட நம் மனதில் நங்கூரமிட்டுள்ளனர். அந்த அளவுக்கு வலுவான கதை களத்தோடு அமைந்துள்ள இந்த படத்தில்... வந்த ரங்கன் வாத்தியாராக பசுபதி முதல், அவரது மகன் வெற்றிச்செல்வனாக நடித்துள்ள கலை, ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரத்தில் டாடி, என அனைவருமே நடித்து அசால்ட் செய்திருந்தனர்.

வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் துஷாரா விஜயன் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர்களை போன்றே... சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதனை சிறப்பாக நடித்திருந்தார் மாறன். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டாலும், அடுத்தடுத்து பல தமிழ் பிரபலங்களின் உயிர்களை பலி வாங்கிய கொரோனாவிற்கு இவரது உயிரும் இரையானது பெரும் வேதனை... 


 

click me!