அடங்காத ரங்கசாமி& கோ..!! சார்பட்டா ரங்கன் வாத்தியாராக மாற்றப்பட்ட காமராஜர்..!! புதுவை கலாட்டா..!!

Published : Aug 01, 2021, 04:22 PM IST
அடங்காத ரங்கசாமி& கோ..!! சார்பட்டா ரங்கன் வாத்தியாராக மாற்றப்பட்ட காமராஜர்..!! புதுவை கலாட்டா..!!

சுருக்கம்

புதுவை முதல்வர் ரங்கசாமி தன்னுடைய 71 ஆவது பிறந்தநாளை ஆகஸ்ட் 4 ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், இப்போதே விதவிதமாக போஸ்டர், கட்அவுட் வைத்து கொண்டாட்டத்தை துவங்கி விட்டனர் அவரது தொண்டர்கள்.

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள் வந்துவிட்டாலே, அவரது கட்சிக்காரங்களுக்குக்கும், தொண்டர்களுக்கும் ஒரே கும்மாளம் தான்... புதுவை முதல்வர் ரங்கசாமி தன்னுடைய 71 ஆவது பிறந்தநாளை ஆகஸ்ட் 4 ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், இப்போதே விதவிதமாக போஸ்டர், கட்அவுட் வைத்து கொண்டாட்டத்தை துவங்கி விட்டனர் அவரது தொண்டர்கள்.

மேலும் செய்திகள்: பிரியா பாவனிக்கு அடித்த ஜாக்பாட்! இந்த முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறாரா? கேட்டா நீங்களே ஷாக்காகிடுவீங்க!
 

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை தழுவியதால், கடந்த ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சியாக செயல்பட்டது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி. இதனால் கடந்த 5 வருடங்களாக, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இருந்தாலும், போஸ்டர், பேனர் போன்றவை அதிகம் வைக்கப்பட வில்லை.  ஆனால் இந்த ஆண்டு மீண்டும் ரங்கசாமி - பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதால், இந்த வருட பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாட அவரது கட்சி காரர்களும், தொண்டர்களும் முடிவு செய்து களத்தில் இறங்கிவிட்டனர்.

குறிப்பாக இவரது பிறந்தநாளில் புதுவையின் பெரும்பாலான பகுதிகளில் விதவிதமான போஸ்டர்கள் வைக்கப்படுவது வழக்கம். முதலமைச்சரை எந்திரன் ரஜினிகாந்த், கஜினி சூர்யா, ஆலவந்தான் கமல், பாகுபலி பிரபாஸ் என அவரது முகத்தை எடிட் செய்து கட்அவுட் வைத்து தொண்டர்கள் அதகளம் செய்வார்கள். இந்த வருடமும் இதே போல், கலக்கலான போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: 'மாரியம்மாள்' கேரக்டரில் இருந்து மீள முடியாத துஷாரா! இயங்குனர் பா.ரஞ்சித்திடம் மன்னிப்பு கேட்டது ஏன் தெரியுமா?
 

அந்த வகையில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்று வரும்  'சார்பட்டா' பரம்பரை படத்தையும் விட்டு வைக்கவில்லை என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள். முதலமைச்சர் ரங்கசாமியை பாக்சிங் ரிங்கிற்குள் நிற்க வைத்து, அவருக்கு காமராஜரை ரங்கன் வாத்தியாராக மாற்றிவிட்டனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!
அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்