பிரியா பாவனிக்கு அடித்த ஜாக்பாட்! இந்த முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறாரா? கேட்டா நீங்களே ஷாக்காகிடுவீங்க!

By manimegalai aFirst Published Aug 1, 2021, 3:22 PM IST
Highlights

அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் பிரபல முன்னணி நடிகர் படத்தில், நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இவருக்கு அடித்த ஜாக்பாட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
 

அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் பிரபல முன்னணி நடிகர் படத்தில், நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இவருக்கு அடித்த ஜாக்பாட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: 'மாரியம்மாள்' கேரக்டரில் இருந்து மீள முடியாத துஷாரா! இயங்குனர் பா.ரஞ்சித்திடம் மன்னிப்பு கேட்டது ஏன் தெரியுமா?
 

2017 ஆம் ஆண்டு 'மேயாத மான்' படத்தின் மூலம் தன்னுடைய வெள்ளித்திரை பயணத்தை துவங்கிய, பிரியா பவானி ஷங்கர்... ஒரு வருடத்திற்கு ஒரு படம் என சிறப்பான படங்களாகவே தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் இந்த 2021 - ல் மட்டும் இவரது கைவசம் சுமார் 10 படங்கள் உள்ளது. 'கசட தபற', 'குருதியாட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'ஹாஸ்டல்', 'ருத்ரன்', 'இந்தியன் 2 ' , '10 தல' , என புதிய படங்களில் கமிட் ஆகிக்கொண்டே செல்கிறார். இவரது இந்த அசுர வளர்ச்சி பல இளம் நடிகைகளை பிரமிக்க வைத்துள்ளது என்றும் கூறலாம்.

அடுத்தடுத்து இந்த படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள உள்ள பிரியா பவானி ஷங்கர், ஏற்கனவே ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியானது. இதை தொடர்ந்து, அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வரும் பிரபல நடிகரின் அடுத்த படத்தில் இரண்டு நாயகிகளில் இவரும் ஒருவராக நடிக்க உள்ளாராம்.

மேலும் செய்திகள்: உடலோடு ஒட்டி இருக்கும் ஓவர் டைட் உடையில்... கிறுகிறுக்க வைத்த காஜல் அகர்வால்..! கொஞ்சம் ஓவராதான் போறாங்களோ..!
 

அதாவது தற்போது நடிகர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் 'மாறன்' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் நடித்து வரும் தனுஷ், விரைவில் தன்னுடைய 44 ஆவது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின், ப்ரீ புரோடுக்ஷன் பணிகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு மற்றும் நாயகிகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

மேலும் செய்திகள்: நண்பர்களுடன் வீடியோ கால் பேசிய தளபதி விஜய்..! ஃபிரெண்ட்ஷிப் டேவில் வைரலாகும் புகைப்படம்..!
 

இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்க உள்ளார்களாம், அதில் ஒருவர் பிரியா பவானி என்கிற தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு நாயகியாக... ராஷி கண்ணா நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் 'யாரடி நீ மோகினி' மற்றும் 'உத்தமபுத்திரன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின், தனுஷ் நடிக்கும் படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது என்றே கூறலாம்.

click me!