தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியரான பிரபல நடிகரின் மகன்... குவியும் வாழ்த்துக்கள்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Aug 2, 2021, 11:13 AM IST

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய நாராயணன் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 


80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸிகளின் ஃபேவரைட் காமெடி நடிகராக வலம் வந்தவர் சின்னி ஜெயந்த். காமெடி நடிகர் என்பதையும் கடந்து ஹீரோவிற்கு நிகரான பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தியிருக்கிறார். குணச்சித்திர நடிகர், வில்லன் என தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது மகன் செய்த சாதனையால் மீண்டும் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். 

Tap to resize

Latest Videos

undefined

சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருபதன் ஜெய், யு.பி.எஸ்.சி தேர்வில் கடந்த ஆண்டு அகிய இந்திய அளவில் 75வது இடத்தை பிடித்தார். அப்போது இச்சம்பவம் திரையுலகினர் பலரையும் மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவக்குமார் உள்ளிட்ட பலரும் சின்னி ஜெயந்திற்கும், அவருடைய மகனுக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். தன்னுடைய மகன்களுக்கு படிப்பின் மீதே அதீத ஆர்வம் என்றும், நடிப்பில் ஆர்வம் இருந்திருந்தால் கட்டாயம் திரைத்துறைக்குள் வந்திருப்பார்கள் என்றும் சின்னி ஜெயந்தி கூறியிருந்ததற்கான அர்த்தம் அன்று எல்லோருக்கும் புரிந்தது. 

ஐஏஎஸ் தேர்வில் தேர்வான ஸ்ருபதன் ஜெய் தற்போது  தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஸ்ருதனுக்கும், அவரது அப்பா சின்னி ஜெயந்துக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ் திரையுலகில் இருந்து முதன் முறையாக ஒரு நடிகரின் மகன் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

click me!