’ அமெரிக்கா சென்றுள்ள கேப்டன் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்பவேண்டாம்’...

Published : Dec 28, 2018, 09:15 AM ISTUpdated : Dec 28, 2018, 09:16 AM IST
’ அமெரிக்கா சென்றுள்ள கேப்டன் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்பவேண்டாம்’...

சுருக்கம்

அங்கு சிகிச்சையில் பெருமளவு முன்னேற்றமில்லாததால் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி கடந்த வாரம் திட்டமிட்ட நாட்களுக்கு ஒருவாரம் முன்பாகவே அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சென்னை மியாட் மருத்துவமனையிலிருந்து அவசர அவசரமாக அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்ட கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் குறித்து பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று அவரது குட்ம்ப வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

சில மாதங்களாகவே தொடர்ந்து உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு சிகிச்சையில் பெருமளவு முன்னேற்றமில்லாததால் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி கடந்த வாரம் திட்டமிட்ட நாட்களுக்கு ஒருவாரம் முன்பாகவே அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவரும் நிலையில் நேற்று இரவு முதல் அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லை என்றும், அவரை சந்திப்பதற்காக உறவினர்கள் அமெரிக்கா விரைந்துகொண்டிருப்பதாகவும் வதந்திகள் காட்டுத்தீயாய் பரவின.

அச்செய்திகளை விஜயகாந்த் குடும்பத்தினர் கடுமையாக மறுக்கின்றனர். அமெரிக்க டாக்டர்களின் சிகிச்சைக்கு நல்ல பலன் இருப்பதாகவும் கேப்டனின் உடல்நலம் மெல்ல தேறிவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?